ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

யூ டியூபில் வெளியான வீடியோ. இளம் பெண்ணுடன் நடனமாடிய பாகிஸ்தான் நீதிபதி மசூத் பிலால் ராஜினாமா! ( வீடியோ இணைப்பு)

பார்ட்டியில் இளம்பெண்ணுடன் நீதிபதி நடனமாடிய காட்சிகள் யூ டியூபில் வெளியானதால் பாகிஸ்தானில் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கனேவல் மாவட்டத்தில் வசிப்பவர் நீதிபதி முகமது மசூத் பிலால்.
இவருடைய சகோதரரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது நடன நிகழ்ச்சி நடத்த இளம்பெண்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் இளம்பெண்களுடன் சேர்ந்து நீதிபதி முகமதுவும் நடனமாடி உற்சாகமாக இருந்தார்.

இந்த காட்சிகளை யாரோ வீடியோவில் எடுத்து யூ டியூபில் வெளியிட்டு விட்டனர். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து நீதிபதி மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நீதிபதி பதவியை முகமது நேற்று ராஜினாமா செய்துள்ளார். இத்தகவலை லாகூர் உயர் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக