ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

9வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணும் காப்பாற்ற சென்றவர்களை அதிர வைத்த வாக்குமூலமும். (படங்கள் இணைப்பு)


ஒன்பது மாடி பில்டிங் ஒன்றின் மொட்டைமாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண் ஒருவரை, குடும்பத்தினரும், நண்பர்களும், போலீஸூமாக சேர்ந்து காப்பாற்ற முயன்ற சம்பவம் இது. ஒரு வழியாக காப்பாற்றியும் விட்டார்கள்.
ஆனால், அதன் பிறகுதான் வந்தது ஆன்டி-கிளைமாக்ஸ்
!
தெற்கு சீனாவின் ஜாங் ஜியன் நகரில் நடைபெற்ற சம்பவம் இது. ஷெங்-ஃபி என்ற பெண் மொட்டை மாடியில் இருந்து குதிப்பதற்கு முயற்சிப்பதை பார்த்துவிட்டு, அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் பலர். தகவல் தெரிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் போலீஸூம் வந்து விட்டது.
மெதுவாக பேச்சு கொடுத்தபடி நெருங்கிய ஆட்கள், ஷெங்-ஃபியின் கால்களை எட்டிப் படிப்பதை காண அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.
இதோ, எட்டிப் பிடித்து விட்டார்கள். இப்போதும், வெளியே விழப்போவதாக திமிறுகிறார் ஷெங்-ஃபி. அவர் திமிறுவதன் காரணம் என்ன என்பதை இவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. ஒருவழியாக பலராக சேர்ந்து அவர் விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டார்கள். அதன்பின் மெதுவாக இழுக்கத் துவங்கினார்கள்.
அப்போதுதான், ஷெங்-ஃபி என்ன சொல்லி கத்துகிறார் என்பதை காது கொடுத்துக் கேட்டார்கள். அதைக் கேட்டபோது, தமது காதுகளையே நம்ப முடியாது போய்விட்டது, காப்பாற்ற முயன்றவர்களுக்கு. அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.
அப்படி என்னதான் சொன்னார், ஷெங்-ஃபி?
சற்று நேரத்துக்கு முன்புதான், இதே இடத்தில் இருந்து 4 வயது குழந்தை ஒன்றை தூக்கி வீசியதாக சொன்னார்!
தமது சகோதரரின் மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்ட ஷெங்-ஃபி, கோபத்துடன் சகோதரனின் குழந்தையை தூக்கி வந்து மொட்டை மாடியில் இருந்து வீசிவிட்டார். அதையடுத்து தாமும் குதித்து தற்கொலை செய்ய முயன்ற போதே, மற்றையவர்களால் காப்பாற்றப்பட்டார்.
அதன்பின் என்ன நடந்தது? இறுதி போட்டோவுக்கு வாருங்கள்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் ஷெங்-ஃபி. இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நகர போலீஸ் பேச்சாளர் ஆல்டோ சாங், “தமது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற ஷெங்-ஃபியை காப்பாற்றி விட்டோம். ஆனால், அவர் இப்போதும் உயிரை விடதான் போகிறார். 4 வயது குழந்தையை கொன்ற குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை வழங்கப்படும்” என்றார்.
உலகிலேயே தற்கொலை சதவீதம் அதிகமாகவுள்ள உள்ள நான்கு நாடுகளில் ஒன்று சீனா. 1லட்சம் ஜனத்தொகைக்கு, 22.23 பேர் வீதம் 2010-ல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
சீனாவின் தற்கொலை சதவீதத்தை விட அதிகமாக உள்ள மூன்று நாடுகளும், லத்வியா, கசகஸ்தான், வட கொரியா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக