
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இஜாஜ் பட், இந்தியாவில்தான் என்றில்லை.. இருநாடுகளுக்கும் பொதுவான ஒரு நாட்டில் இரண்டு நாட்டு அணிகளுக்கு இடையே அடுத்த ஆண்டு போட்டி மட்டும் நடைபெறாமல் இருந்தால் நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதிநிலைமை படுமோசமாக இருந்திருக்கும் என்றும் கூறிய்ள்ளார்.
"2006-ம் ஆண்டில் இருந்து இந்தியாவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடவில்லை. 2009-க்குப் பிறகு வெளிநாட்டுப் போட்டிகளையும் பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை. இதனால் இந்தியாவில் நடைபெறக் கூடிய இந்த ஒருநாள் தொடர் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது" என்றும் பட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுடன் விளையாடும்போது ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் 40 முதல் 45 மில்லியன் அமெரிக்க டாலர் பாகிஸ்தானுக்குக் கிடைக்கும். இதே இந்தியா போட்டிகளை நடத்தினால் அந்நாட்டுக்கு மீட்டியா உரிமங்கள் மூலம் 100 மில்லியன் டாலர் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கும் வருவாயில் பாகிஸ்தானும் பங்கு கோர வேண்டும். அப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொள்ளாத நிலையில் பாகிஸ்தான் அந்நாட்டு அணி விளையாடுவதற்கான உத்தரவாதத்தைப் பெற வேண்டும் என்றும் இஜாஜ் பட் கூறியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக