சென்னை: சென்னை மற்றும் புறநகரில் தண்டவாளத்தைக் கடந்து நாள்தோறும் 2 பேர் வீதம் 6 மாத காலத்தில் 175 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்களை கேட்டு உறவினர்கள் யாரும் வராததால் அப்படியே சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.
சென்ட்ரல் பகுதியில் 22 ஆண்களும், 2 பெண்களும், எழும்பூரில் 52 ஆண்களும், 8 பெண்களும், கொருக்குப்பேட்டையில் 18 ஆண்களும், 1 பெண்ணும் பலியாகி உள்ளனர். இதுதவிர ஆவடியில் 15 ஆண், 2 பெண், பெரம்பூரில் 19 ஆண், செங்கல்பட்டில் 18 ஆண், 1 பெண், தாம்பரத்தில் 18 ஆண், 1 பெண் ரெயிலில் அடிபட்டு பலியாகி உள்ளனர்.
பலியானவர்களின் முகவரி கிடைக்காதநிலையில்தான் உறவினர்களை கண்டுபிடித்து உடல்களை ஒப்படைக்க முடியவில்லை என்கின்றனர் ரயில்வே போலீசார். இதனால் அடையாளம் காணப்படாத உடல்களின் போட்டோ நகல்களை ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் அனுப்பி வைத்து வருகின்றனர். அப்படியாவது சவக்கிடங்கில் இருக்கும் சடலங்களை எடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக