ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

4,00,000 பவுண்ட் திருடிவிட்டு ஜெயில் தண்டனையை தவிர்க்க ஊமையாக நடித்த இந்திய வம்சாவளி மனிதரின் அதிரடி வாக்கு மூலம்.


இந்திய வம்சாவளியை சேர்ந்த அம்ரிட்பால் மெஹட் என்பவர் லண்டன் மான்செஸ்டர் தபால் நிலையத்தில்  4,00,000 பவுண்ட் திருடியதாக கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர்  நீதிமன்ற நடவடிக்கைகளின்போது கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஊமையாக நடித்துள்ளார். அவரது அமைதியில் சந்தேகம் அடைந்த நீதிபதி, சிறைக்கைதியான அவரை ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் சிக்கிச்சை பெற உத்தரவிட்டார்.

அப்போது அந்த மனோதத்துவ மருத்துவரிடம் மெஹட் பஞ்சாபி மொழியில் முணுமுணுத்தது தெரியவந்தது. மருத்துவர் மற்றும் மெஹட் இருவரிடையே நடைபெற்ற உரையாடல் மான்செஸ்டர் நீதிமன்றத்தில் போட்டுக்காட்டப்பட்டது.
அதைக்கேட்ட நீதிபதி 26 வயதான மெஹட் பிறவியால் ஊமையல்ல எனவும், தண்டனையிலிருந்து தப்பவே அவ்வாறு நடித்துள்ளார் எனவும் தீர்மானித்து, அவருக்கு 4 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்தார்.
Indian-origin conman turns dumb to avoid UK jail
இது குறித்து மெஹட்டிடம் கேட்டபோது உண்மையிலேயே ஆன்மீகவாதியான தான் கைது செய்யப்பட்டவுடன் கடவுள் தன்னை ஒரு ஊமையாகவே மாற்றிவிட்டார் என்று கூறினார்.
கடந்த 2008-09 ஆண்டுகளில் தங்கள் குடும்பம் வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாகவும், அதனை ஈடுகட்ட இதுபோன்ற திருட்டில் ஈடுபட்டதாகாவும் அம்ரிதா மெஹட் ஒத்துக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக