கொழும்பு: தமிழகத்தில் இலங்கை அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதைப் போல் தங்கள் நாட்டுக்கு வருகை தரும் இந்திய அரசியல்வாதிகளுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. ஜான் அமரதுங்க கூற்யுள்ளதாவது:
அண்மையில் இலங்கை அமைச்சர் ரெஜினால்ட் கூரே இந்தியாவிற்கு சென்ற போது தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் அங்கிருந்து நாடு திரும்ப வேண்டியாயிற்று.
இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை அரசியல்வாதிகளினுடைய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது இந்திய அரசின் கடமை. இந்த நடவடிக்கைக்கு இந்திய தூதரிடம் நாடாளுமன்றம் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக