ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பெண் பா.உறுப்பினரை சராமாரியாக தாக்கும் அரசியல்வாதி! டிவியில் நேரடியாக மக்கள் பார்க்க நடந்த நிகழ்ச்சி (வீடியோ இணைப்பு)

கிரேக்க ஊடகமொன்றில் நேரடி ஒளிபரப்பாக நடாத்தப்பட்ட ஒரு காலைநேர அரசியல் விவாதத்தின்போது நாசி எதிர்ப்பு அரசியல்வாதியொருவர் இடதுசாரிக் கட்சியின் ஓர் உறுப்பினர்மீது தண்ணீர்க் குவளையொன்றை வீசியும் மற்றவர்மீது முகத்தில் கைகளால் தாக்கியுமுள்ளார்
.
Golden Dawn என்ற கட்சியின் பேச்சாளர் அவரைப்பற்றிய நீதிமன்ற வழக்குப் பற்றிக் குறிப்பிட்ட Syriza என்ற இடதுசாரிக் கட்சியின் பெண் அரசியல்வாதிமீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது கம்யூனிசக் கட்சியின் உறுப்பினர் ஒருவர்மீதும் தலையில் பலமுறைகள் குத்தினார்.
இது இன்னொருவர்மீது நீரை ஊற்றியதற்காக இப்பெண் அவர்மீது கடதாசிகளை முகத்தின்மீது எறிந்திருந்தார். அதற்குப் பதிலடியாகவே அவர் அப்பெண்மீதும் தாக்குதல் நடாத்தினார்.
தாக்குதல் நடாத்திய நாசியெதிர்ப்புப் பா.உ. முன்னாள் கிரேக்க இராணுவத்தின் சிறப்புப் படையில் இருந்தவரென்றும் அண்மைய தேர்தலிலேயே இவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவானாரென்றும் கூறப்படுகின்றது.
இதனால் இவர் உடனடியாகவே கைதுசெய்யப்பட்டார். இதற்காக அவரது கட்சி அவரைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக