ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

FaceBookல் உங்களுக்கு பிடித்த Backgrouds கொடுப்பது எப்படி?


நாம் இணையத்தில் தட்டச்சு செய்யும் முதல் தளமாகவும், மிகப்பெரிய சமூக தளமாகவும் FaceBook மாறிவிட்டது. இப்பொழுது இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.


தற்போது இந்தத்தளத்தினை நாளொன்றிற்கு 500 மில்லியனுக்கும் மேற்ப்பட்டோர் உபயோகப் படுத்துகின்றனர். நாம் பயன்படுத்தும் முகப்புதகத்தின் பயன்பாட்டை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அதன் தோற்றம் ஒரே மாதிரியாக இருப்பது தான் நம்மில் அநேகருக்கு மிகவும் சலிப்பை ஏற்படுத்துகின்றது.


இதை மாற்றும் வகையில் அந்த நிறுவனம் ப்ரொபைல் தீம்ஸை தற்போது அறிமுகபடுத்தி இருக்கிறது. அதன் மூலம் FaceBook இன் தோற்றத்தை மாற்றி அமைக்கலாம். ஆனால் அது மிகவும் குறைவாக உள்ளது. மேலும் அவை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்குமா என்று தெரியாது. அதனால் நாம் விரும்பும் வண்ணம் தீம்களை வடிவமைப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.


இந்த தளத்தில் நீங்கள் விரும்பும் வண்ணம் உங்களுக்கான தீம்ஸை வடிவமைக்கலாம். மேலும் அதில் உள்ள தீம்சையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் நீங்கள் அதற்குரிய மென்பொருளை அந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவேண்டும்.


மேலும் இதில் நீங்கள் இன்னும் சில மாற்றங்களை செய்யலாம், உங்கள் கணக்கில் வலது பக்கத்தில் உள்ள Settinges என்ற பொத்தானை அழுத்தவும் அதில் SNOW FLAKES மற்றும் FALLING HEARTS போன்றவற்றை பயன்படுத்தலாம், தேவை இல்லை என்றல் அதை DISABLE செய்து கொள்ளுங்கள்.


மேலும் நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை தேர்வு செய்து கேட்கலாம் மற்றும் இதில் THUMB NAIL VIEW போன்ற வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளது. இதை பதிவிறக்கி உங்கள் பக்கத்தை அழகாக மாற்ற உதவுகின்றது.


இணையதள முகவரி : FBSkins.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக