ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

டேம் 999 படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தமிழக அரசு தடை


சர்ச்சைக்குரிய டேம் 999 படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
அணைக்கட்டு உடைந்து லட்சக்கணக்கான மக்கள் மரணமடைவது போல தயாரிக்கப்பட்டுள்ள டேம் 999 ஆங்கிலப்படம் இந்தியாவில் இந்தவாரம் வெளியாகிறது.
இந்த திரைப்படம் முல்லைப்பெரியாறு அணையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது
என்றும் இதனை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியிருந்தனர்.

வெளிநாட்டில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர் மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே இது போன்று சர்ச்சைக்குரிய படத்தை எடுத்துள்ளதாகவும், இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடப்போவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்களும் தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் டேம் 999 படத்தை வெளியிடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக