ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எத்தனை படங்களில் பாக். பார்டரில் ரகசியமாக உளவு பார்த்த விஜயகாந்த் நடத்தும் கட்சி இது. எப்படி ரகசியமாக ஆபரேட் பண்ண வேண்டும் என்று அவருக்கு தெரியாதா, என்ன?

என்னே நினைத்தேன் நானும் சிரிச்சேன் கேப்டன்  விஜயகாந்த் தெரிந்து கொண்டவை
 தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், கூட்டணி விஷயத்தில் ஜெயலலிதாவிடம் ஒரு வழக்கம் இருக்கிறது. அது, தமது கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியையாவது பரிதாபத்துக்குரிய நிலைக்கு தள்ளிவிடுவது. இம்முறை அதில் சிக்கியுள்ளார் விஜயகாந்த். (கடந்த சட்டமன்ற தேர்தல் டயத்தில், வைகோ சிக்கினார்)


தமிழக தேர்தல் கூட்டணிகளில், மிகவும் பரிதாபத்துக்குரிய நிலைக்குப் போயிருக்கிறது விஜயகாந்தின் தே.மு.தி.க.

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து, தங்களை கழட்டியே விட்டார்களா, அல்லது இனியும் ஒரு சான்ஸ் இருக்கிறதா என்று புரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டு உள்ளனர் அக்கட்சியின் நிர்வாகிகள். தேர்தல் கூட்டணி விஷயங்களில் அவ்வளவாக அனுபவமற்ற விஜயகாந்தோ, கண்ணைக் கட்டி காட்டில் விடப்பட்ட நிலையில் இருக்கிறார்.
“அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை” என்கிறார் அவருக்கு நெருக்கமான ஒருவர்.
நேற்று அவரது கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும், தமிழகத்தின் சகல பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ரகசியமாக (என்று விஜயகாந்த் நினைத்துக் கொண்டு) கூட்டப்பட்ட அவசரக் கூட்டம் ஒன்றில், அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை நடாத்தப்பட்டது.
இப்படி ஒரு கூட்டம் நடைபெறுவது பற்றி தே.மு.தி.க. வாயே திறக்கவில்லை. சென்னையில் மிகக் கவனமாக ரகசியமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் ரகசியமாக செய்யப்பட்டிருந்தன.
காலையில் இருந்தே தே.மு.தி.க. கோயம்பேடு அலுவலகத்துக்கு சும்மா விசிட் அடித்த பத்திரிகையாளர்களை, ஏதேதோ காரணம் கூறி அங்கிருந்து அகற்றுவதிலேயே குறியாக இருந்தார் அலுவலக நிர்வாகி ஒருவர்.  இதுவே பத்திரிகையாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் இந்தக் கூட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து காலையில்தான வந்து இறங்கியிருந்த மாவட்ட செயலாளர்களால் கதை லீக்காகி விட்டது.  அவ்வளவாக அரசியல் அனுபவமற்ற சில மா.செ.கள், “ரகசியமாக ஆலோசனை நடாத்த எங்களை விஜயகாந்த் அழைத்திருக்கிறார்” என்று தாம் தங்கிய லாட்ஜ் வாசல்களில் நின்று பெருமை அடித்துக் கொண்டிருந்தனர்.
கூட்டத்திற்கு வரும் எந்தவொரு மாவட்டச் செயலாளரும், காரில் வந்து இறங்கக் கூடாது.  அனைவரும் ஆட்டோக்களில்தான் வர வேண்டும் என கட்சியிலிருந்து உத்தரவு போடப்பட்டிருந்தது.  அதாவது ரகசியமாக கூட்டம் நடாத்துகிறார்களாம்!
93 படங்களில் பாகிஸ்தான் எல்லைக்குள் ரகசியமாகப் போய், 3,893 வில்லன்களை செமையாக சாத்திவிட்டு வந்த ‘ஹீரோ’ விஜயகாந்த் நடத்தும் கட்சியல்லவா?  எப்படி ரகசியமாக பிளான் பண்ண வேண்டும் என்று அவருக்கு தெரியாதா என்ன?
‘ரகசிய’ உத்தரவு காரணமாக கட்சி நிர்வாகிகள் சிலர், கோயம்பேடு வரை காரில் வந்து, பக்கத்து சந்தில் காரை நிறுத்திவிட்டு, லோக்கல் ஸ்டான்டில் ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்து இறங்கினார்கள்.  இவர்கள் மதுரை, திருநெல்வேலி ஸ்லாங்கில் தமிழ் பேசிக்கொண்டு, 500 மீட்டர் தொலைவிலுள்ள கட்சி அலுவலகத்துக்கு செல்ல ஆட்டோ பேரம் பேசிக்கொண்டிருந்தது, கண்கொள்ளாக் காட்சி
இது போதாதா, ஆட்டோ ஸ்டான்டில் இருந்து  கதை பரவுவதற்கு?
அதைத் தவிர அடுத்த ‘ரகசிய’ ஏற்பாடு ஒன்றும் இருந்தது. கட்சி அலுவலக வாசலில், வெளியாட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க, கறுப்பு நிற ஆடை அணிந்த தனியார் செக்யூரிட்டி ஆட்கள் வேறு, பந்தாவாக நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
கட்சி அலுவலகத்துக்கு வரும் ஆட்களிடம் இந்த கறுப்பு யுனிபோர்ம் சென்யூரிட்டிகள், “இங்கே நிற்கக்கூடாது. போங்க.. போங்க.. உள்ளே ரகசிய மீட்டிங் நடக்கிறது” என்று மிச்சம் மீதி இருந்த ‘ரகசியத்தை’யும் அவுட் ஆக்கிக் கொண்டிருந்தார்கள்.
“பாவம்.. இவங்க ரொம்ப இன்னசென்டான கட்சியாக இருக்காங்களே” என்றார் அருகிலுள்ள டீக்கடையில், காத்திருந்த பத்திரிகையாளர் ஒருவர்.  விஜயகாந்த் நடாத்தும் ரகசிய  கூட்டத்தில் இருந்து  வரப்போகும் செய்திக்காக அங்கே வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார் அவர்.
இப்படி அரை மணி நேரத்துக்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் கட்சி நிர்வாகிகள், ‘அதி ரகசியமாக’ கட்சி ஆபிஸ் வாசலில் திபுதிபுவென வந்திறங்க, சற்று நேரத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் வந்துவிட, உள்ளே தொடங்கியது  ரகசியக் கூட்டம்.
கூட்டம் முடிந்தபின், ரகசியக் கூட்டத்தில்  விஜயகாந்த் என்ன பேசினார் என்பதை, விறுவிறுப்பு.காம் நிருபரால்  அருகிலுள்ள டீக்கடையில்  கேட்டு அறிந்துகொள்ள முடிந்தது.  அவரும் ரகசியம் பற்றித்தான், ரகசியமாக   பேசியிருக்கிறார்!
“எமது கட்சி அலுவலகத்தில் நடக்கும் ரகசிய கூட்டங்கள் பற்றிய தகவல்கள்கூட, பத்திரிகைகளுக்கு எப்படி தெரியவருகிறது? எனக்கு பதில் தெரியும். கட்சியின் சில நிர்வாகிகள்தான் ரகசியம் லீக் ஆவதற்கு காரணமாக இருக்கின்றீர்கள் என்பதும் எனக்கு தெரியும்.
இப்படியான நிர்வாகிகள் தமது செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை கட்சியிலிருந்து தூக்கியெறிய நான் தயங்க மாட்டேன். (நல்ல வேளையாக, “முதுகில் நாலு சாத்து சாத்துவதற்கு தயங்கமாட்டேன்” என்று சொல்லவில்லை) இதே போன்று தொடர்ந்து நடந்தால், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதையே நிறுத்தி விடுவேன்” என்று விஜயகாந்த் பேசியதாகக் கூறினார், பக்கத்து டீக்கடை டீ மாஸ்டர்.
“வரும் 25ம் தேதி, கோவையில் நடக்கவுள்ள கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தை வெற்றிபெற வைக்க, அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் விதத்தில் இருக்க வேண்டும் அந்தக் கூட்டம்” என்றும் விஜயகாந்த் கூட்டத்தில்  கூறினாராம்.
சரி. உள்ளாட்சித் தேர்தல் கூட்டணியில்,  அ.தி.மு.க. இவர்களை  கழட்டி விடுவது பற்றி ஆலோசிக்கத்தானே இந்த ரகசிய கூட்டம் கூட்டப்பட்டது. அது பற்றி என்ன முடிவு எடுத்தார்களாம்?
“அ.தி.மு.க. தலைமையுடன் பேச வேண்டியதை நாங்கள் பேசிக் கொள்கிறோம். கூட்டணி பற்றி என்ன முடிவு எடுப்பது என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் ‘எதற்கும்’ தயாராக இருக்க வேண்டும்” என்று பேசினாராம் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அடக் கடவுளே, இதை மாவட்ட செயலாளர்களுக்கு போனிலேயே சொல்லியிருக்கலாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக