ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னைக்கு சோனியா அனுப்பிய புறா எங்கே? தங்கபாலு சூப் வைத்தாரா?


 காங்கிரஸ் கட்சிக்கு கலைஞர் கொடுத்த அதியுச்ச ஷாக் ட்ரீட்மென்ட்தான், காங்கிரஸ் வட்டாரங்களில் ஹாட் டாபிக். “தலைவர் ரொம்பத்தான் பணிஞ்சு போறாரே” என்று கவலையோடு காமண்ட் அடித்துக் கொண்டிருந்த தி.மு.க. தொண்டர்களே, “இப்பதான் அவரு பழைய பார்முக்கு வந்திருக்காரு” என்று சந்தோஷமாகக் கூறும் விதத்தில் இருக்கிறது, காங்கிரஸ் கட்சிக்கு கலைஞர் கொடுத்த ஷாக்.

நெஜமாகவே கருணாநிதி காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்ய துணிந்து விட்டாரா? அல்லது இதுவும் ஒரு வழமையான கலைஞர் பாணி டாக்டிக்கா? விடை அறிய, காங்கிரஸ் வட்டாரங்களில் கொஞ்சம் துருவிப் பார்த்தோம்.
கலைஞர் குடும்பத்தில் சி.பி.ஐ. கண்வைத்த நாளில் இருந்தே டில்லிக்கு பணிந்து போன முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல் தடவையாக டில்லியுடன் முறுகியிருக்கிறார். “உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்தே போட்டியிடும். கூட்டணி ஏதும் கிடையாது” என்ற கலைஞரின் அறிவிப்பு, காங்கிரஸ் வட்டாரங்களில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், தனித்துப் போட்டியிட காங்கிரஸ் ரெடியாக இல்லை.
“வழமைபோல கூட்டணி கட்சிக்காரங்க முக்கால்வாசி வேலையைச் செய்வாங்க. நாம போய் மொய் எழுதிட்டு வந்துரலாம்” என்பதே தமிழக காங்கிரஸ் ஸ்டைல் அரசியல். அந்த நினைப்பில், உள்ளாட்சி தேர்தல் வருவதற்கு காலம் மிக நெருங்கும்வரை இருந்து விட்டார்கள் அவர்கள்.
திடீரென டில்லி, அவர்களிடம் போய், “நாம தனிச்சுப் போட்டியிடலாமா?” என்று கேட்டால், அவர்கள் தலைகீழாக, “நாம ஓடிப் போயிரலாமா?” என்றுதான் யோசிப்பார்கள்.
அந்தளவுக்கு காங்கிரஸ் தரப்பில், உள்ளாட்சி தேர்தலுக்கான எந்த முன்னேற்பாடும் செய்யப்படவில்லை. தமிழக அரசு வட்டாரங்களில் கூறப்படுவதுபோல இன்னமும் இரண்டு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல்கள் வந்துவிட்டால், தேர்தல் வெலைகளைக் கவனிக்க ஆட்களை வலை வீசித் தேட வேண்டியிருக்கும்
இந்த லட்சணத்தில், கட்சிக்குள் தமிழகத்தில் ஆயிரம் கோஷ்டிகள். தமிழகத்தில் கட்சியை வழிநடத்த ஒழுங்கான தலைவரே கிடையாது. “தற்போது உள்ளவர் (தங்கபாலு) தலைவரே கிடையாது” என்கிறார்கள், பெரும்பாலான கட்சிக்காரர்கள்.
‘புதிய தலைவர் யார் என்பதை டில்லி கடிதம் மூலம் அறிவிக்கும்” என்று சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான காலத்திலேயே சொன்னார்கள். ‘தலைவர் அறிவிப்பு’ கடிதத்தை டில்லியிலிருந்து ஒரு புறாவின் காலில் கட்டி அனுப்பினாலாவது இதற்குள் சென்னைக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால், கடிதத்துடன் புறாவும் வரவில்லை. அட்லீஸ்ட், கடிதம் தொலைந்து விட்டது என்று புறா மாத்திரமாவது வந்து கம்பிளைண்ட் கொடுக்கவில்லை. (இளங்கோவனைக் கேட்டால், “தங்கபாலு, புறாவை அடிச்சு சூப் செய்துவிட்டார்” என்பார்!)
இப்படியான நிலையில், “தி.மு.க. தனித்துப் போட்டி” என்று கலைஞரின் அறிவிப்பு வந்ததும் கலங்கித்தான் போயிருக்கிறது தமிழக காங்கிரஸ் வட்டாரம்.
வெள்ளிக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. ‘தலைவர்’ தங்கபாலு, “உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும். அதுவும் சும்மா ஒரு அடையாளத்துக்காக ஓரிரு இடங்களில் போட்டியிடுவதுடன் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடுவோம்” என்று வீர முழக்கம் செய்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட திருநாவுக்கரசர், இளங்கோவன், ஜே.எம்.ஆரூண், உட்பட பல லோக்கல் தலைவர்கள், கொட்டாவி விட்டபடி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத தங்கபாலு தனது ஆக்‌ஷன் பிளானை விவரித்தார்.
“தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வேட்பு மனு செப்டெம்பர் 18ம் தேதி விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் 20ம் தேதி எம்மிடம் வந்துசேர வேண்டும். விருப்பு மனு கட்டணத்தையும் மறக்காமல் செலுத்த வேண்டும்.
மேயர் பதவிக்கு போட்டியிடுவோர் விருப்பு மனு கட்டணம் ரூ.10,000. அதைத் தவிர, நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ. 5,000 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.3,000, நகர வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000, விருப்பமனு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார் அவர் சீரியஸாக.
“விருப்பு மனு கட்டணமா?  தனிச்சு போட்டின்னா, வேட்பாளர்களை தேடிப் பிடிக்கிறதுக்கு நாமாதான் பணம் கொடுக்கணும்” என்றார் கூட்டத்திலிருந்த ஒருவர் சத்தமாக.
அதைக்கேட்டு பலத்த சிரிப்பொலி  எழுந்ததைத் கண்டுகொள்ளாமல், அடுத்த டாபிக்குக்கு போனார் தங்கபாலும். அன்றைய தினம் யாருடைய வேட்டி சட்டைகளும் கிழியவில்லை என்பதே கூட்டத்தின் ஹைலைட்.
வீம்புக்காக தாங்களும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிக்கை விட்டாலும், “அடுத்து என்ன” என்ற திகிலில்தான் இருக்கிறார்கள் என்பது காங்கிரஸ் வட்டாரங்களில் பேசும்போது புரிகிறது. கட்சிக்குள் பலரது நினைப்பு, “கொஞ்சம் பொறுங்க. கலைஞரை டில்லி மிரட்டியாவது வழிக்குக் கொண்டுவந்துவிடும்” என்ற ரீதியிலேயே இருக்கிறது.
மொத்தத்தில், தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்கிறார்கள் இவர்கள்.
ஒருவேளை தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டால், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு ‘மிகக் கேவலமான’ முடிவுகளைக் கொடுக்கும் (சட்டமன்ற தேர்தல்களில் கிடைத்தது ‘சாதா கேவலமான’ முடிவுகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக