ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கருணாநிதி போலிசுக்கு விடுத்த இதே மிரட்டல்,


முன்னாள் அமைச்சர்களான அவரது சகாக்கள், சேலத்திலும், திருச்சியிலும், விழுப்புரத்திலும் ஏற்கனவே விடுத்ததுதான்!
 எமது ஆட்கள்மீது கைவைத்தால், நாளைக்கு எமது ஆட்சி வரும்போது, நன்கு ‘கவனிக்க’ படுவீர்கள்” இவ்வாறு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார், முன்னாள் முதல்வர் கருணாநிதி. எச்சரிக்கை யாருக்கு தெரியுமா? தமிழக போலிசாருக்கு!

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை உள்ளது. “தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைப்பதற்கு ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, போலீசாரும் ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும். வினையை இன்றைக்கு விதைப்பவர்கள், ஒருநாள் வினையை அறுவடை செய்தே ஆக வேண்டும்” என்கிறது அவரது அறிக்கை.
பொதுவாகவே தமிழகத்தில் ஒரு ஆட்சி மாறி, மற்றொரு ஆட்சி வரும்போது, முந்தைய ஆட்சிக்கு விசுவாசமாகச் செயற்பட்ட அரசு அதிகாரிகள் பழிவாங்கப்படுவதுண்டு. இந்த விஷயத்தில் எந்தக் கட்சியும், எந்த ஆட்சியும் (திராவிடக் கட்சிகள் பதவிக்கு வந்தபின்) விதிவிலக்கல்ல.
எனவே இது எதிர்பார்க்கப்படக்கூடிய விஷயம்தான்.
“ஆனால், அதை வெளிப்படையாகவே ஒரு அறிக்கை மூலமாக வெளியிடுவது, முன்னாள் ஆளும் கட்சியினரின் மேல் நடவடிக்கை எடுக்கும் காவல்துறையினருக்கு ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில்.
தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சில முன்னாள் அமைச்சர்கள், தம்மைக் கைது செய்ய வந்த அதிகாரிகளிடம் கிட்டத்தட்ட இதுபோன்ற மறைமுக மிரட்டல்களை விடுத்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில், கைது நடவடிக்கைகளுக்கு சென்ற காவல்துறையினரை நோக்கி, “நாளைக்கே நம்ம ஆட்சி வருமில்ல.. அப்ப கவனிச்சுக்கிறன்” என்ற வார்த்தைகள் வந்து வீழ்ந்தன என்கிறார்கள்.
தி.மு.க. தலைவர் விடுத்துள்ள அறிக்கையில், “தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களை பொய் வழக்கில் எப்படி சிக்க வைப்பது என்பதை மட்டுமே ஆளும் அ.தி.மு.க.வினர் சிந்தித்து வருகின்றனர். ஒரு வழக்கில் கோர்ட் ஜாமின் வழங்கினால், வேறு ஏதாவது ஒரு வழக்கை அவர்கள் மீது தொடர்ந்து, சிறையில் வைப்பதற்கான முயற்சியில் போலீசாரின் துணையோடு ஆளும் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்” என்றும் கூறப்பட்டுள்ளது.
கருணாநிதியின் இந்தக் கூற்று மக்கள் மத்தியில் எடுபடுமா? அவரது மற்றைய கருத்துக்கள் எப்படியோ, இந்தக் கருத்து எடுபடும் என்றுதான் சொல்ல வேண்டும். தி.மு.க.வினர் மீதான கைது நடவடிக்கைகளில், தற்போது மாறிமாறி வரும் செய்திகள் அப்படியொரு இம்பிரெஷனைத்தான் ஏற்படுத்துகின்றன.
இருந்து பாருங்கள், இந்த கைது விவகாரங்கள் ஏற்படுத்தும் பொதுஜன அபிப்பிரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக