தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்களை வீடு வீடாக வினியோகம் செய்திட முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
.
தமிழகத்தில் தற்போதைய மக்கள் தொகை 7 கோடியே 80 லட்சம். இதில் சுமார் 1கோடியே 10 லட்சம் பேர் ரேஷன் கார்டுகள் வைத்துள்ளனர். ரேஷன் கார்டுகள் வைத்துள்ளவர்களுக்கு 32 மாவட்டங்களில் உள்ள 36 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும்போது ஸ்டாக் இல்லை, எடை குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரிகளிடம் புதிய தி்ட்டம் தீட்டுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. அத்தியாவசியப் பொருள்களை பாக்கெட்டுகளாக வாகனங்களில் ஏற்றிச் சென்று வீடுவீடாக விநியோகம் செய்யும் திட்டம் குறித்து அவர்கள் யோசனை கூறியதாகவும் விரைவில் இதை அறிமுகப்படுத்தப்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக