ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

லண்டன் கலவரத்துக்கு காரணம் பெண் மீதான தாக்குதலா?



article-2023254-0D54EC0500000578-214_964x58016 வயதுப் பெண், காவற்றுறையினரின் வாகனம் மீது கல்லை வீசியதனால் தான் ரொட்டன்ஹாமில் காவற்றுறையினர் தாக்குதலைத் தொடக்கி மார்க் டகன் என்பவரைக் கொன்றனர் என சாட்சிகள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கெதிராக 200 இளைஞர்கள் என்பீல்ட் பகுதியில் வன்முறையைத் தொடங்கியதில் யன்னல்கள், கார்கள் என்பன சேதமாக்கப்பட்டதோடு கடைகளும் சூறையாடப்பட்டன.

மார்க் டகன் இறந்த இடத்தில் காவற்றுறையினர் பயன்படுத்தக்கூடாத ஆயுதங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது 55 பேர்வரை கைதுசெய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
100 தடவைகள் ருவிட்டரில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட காவற்றுறைக் கார்கள் எரியும் படங்களால் வன்முறை இன்னும் அதிகமாகுமென அச்சமேற்பட்டுள்ளது.
என்பீல்டில் அடுத்த நாள் நடந்த கலவரம் முதல்நாளின் தொடர்ச்சியாகவே தெரிவதாக ஸ்கொட்லன்ட் யாட் தெரிவித்தது.
கலகக்காரர்களை அடக்கத் தடியடிப் பிரயோகமும் நாய்களும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இவர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் பேருந்துகளிலும் நகரத் தொடர்வண்டிகளிலும் வந்து அப்பகுதியில் ஒன்றுசேர்ந்ததாகத் தெரியவருகின்றது. இது ஏதாவதொரு சமூக வலைத்தளத்தினூடாகவே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.
எனினும், மார்க் டகனின் உறவினர்கள் டகன் ஒரு கொள்ளைக்காரனோ கலகக்காரனோ அல்லவென்றும் சாதாரணமான ஒரு குடும்பஸ்தனே என்றும் அவரைக் காவற்றுறையினர் கொன்றிருக்கவேண்டிய அவசியமென்ன என்றும் கேள்விகேட்கின்றனர்.
ஆனால் மார்க் டகனின் இறப்பிற்கு அனுதாபம் தெரிவிக்கும் ஸ்கொட்லன்ட் யாட் காவற்றுறையினர் இதற்குப் பதிலாக ஒரு கலவரத்தை  ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் பொதுமக்களின் கடைகளையும் வாகனங்களையும் எரிக்கவேண்டிய காரணமென்னவென்றும் எதிர்க்கேள்வி கேட்கின்றனர்.

  •             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக