ஊழலை ஒழிக்க வலுவான லோக்பாலர் மசோதா கோரி போராடும் அன்னா ஹஸாரேக்கு எனது மக்கள் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்று நடிகர் விஜய் கூறினார்.
அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தர இன்று காலை டெல்லி சென்றார் நடிகர் விஜய்.
உண்ணாவிரதப் பந்தலில் அவர் அன்னா ஹஸாரேவைச் சந்தித்து தனது உறுதியான ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தமிழகத்தின் ஒட்டுமொத்த வாழ்த்தாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம் என அவர் ஹஸாரேயிடம் தெரிவித்தபோது, மிக்க நன்றி என பதிலுக்கு சொன்னார் அன்னா.
பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடையே விஜய் பேசினார்.
அவர் கூறுகையில், "அன்னா ஹஸாரே நடத்தி வரும் இந்தப் போராட்டம் நம் தேச வரலாற்றில் முக்கியமான ஒன்று. எழுபத்தைந்து வயதிலும் பத்து நாட்களாக அவர் உண்ணாவிரதமிருப்பது அவரது உறுதியைக் காட்டுகிறது. இந்த நாட்டுக்காக, மக்கள் நலனுக்காக அவர் உண்ணாவிரதமிருக்கிறார். அது அவரது தேசப்பற்றை உலகுக்கே உணர்த்துவதாக உள்ளது.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை இந்த தேசம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் விதைத்துவிட்டார் ஹஸாரே.
ஒரு தமிழன் என்ற முறையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்று இங்கு வந்தேன். அந்த உணர்வுடன் இன்று எனது அடையாள உண்ணாவிரதத்தை இங்கே மேற்கொண்டதை பெருமையாகக் கருதுகிறேன்.
அன்னாவின் உடல்நிலை நன்றாக இருக்க கடவுளிடம் வேண்டிக்கொளகிறேன். தமிழ்நாட்டில் உள்ள எனது மக்கள் இயக்கம் அன்னாவின் போராட்டத்தை ஆதரிக்கும். இந்த போராட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும்," என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக