ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மூவருக்கும் தூத்குத்தண்டனை தீர்ப்பு வழங்கியது கோர்ட். தண்டனை பெற்ற இவர்கள் 21 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். இந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
கருணை மனு நிராகரிப்பு பற்றிய குடியரசுத்தலைவரின் முடிவு பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசு மூலம் வேலூர் சிறை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் செப்டம்பர் 7ஆம் திகதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முருகன், சாந்தன், பேரறிவாளனிடம் நாளை சிறை நிர்வாகம் இந்த தகவலை தெரிவிக்கும்.
இச்செய்தியை அறிந்து தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நேற்று இரவு( 25.8.2011) 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் உணர்வாளர்கள் ஒன்று கூடி இதை தடுப்பது எப்படி என்று சீமான் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆலோசனையில் நாளை வெள்ளிக்கிழமை 26.8.2011 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்தக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இவ்வழகில் ஆஜராக இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியை களம் இறக்க முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக