சென்னை: அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பாலுக்கு ஆதரவாக தமிழ் சினிமாக்காரர்களின் உண்ணாவிரதம் இன்று சென்னை பிலிம்சேம்பரில் நடந்தது.
ஆனால் சூர்யா தவிர்த்த முன்னணி நடிகர்கள், முக்கிய தயாரிப்பாளர்கள் என யாரும் இதில் பங்கேற்கவில்லை.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் இன்று காலை தொடங்கியது. அங்கு சாமியானா பந்தல் போடப்பட்டு, அதில் அன்னா ஹசாரே உருவப்பட பேனர் கட்டி இருந்தனர்.
காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் துவங்கியது.
நடிகர்கள் சூர்யா, பிரபுதேவா, தியாகு, நடிகை ரோகினி, இயக்குனர்கள் சேரன், மனோபாலா, தயாரிப்பாளர்கள் கே.ஆர்., சித்ராலட்சுமணன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தும் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும் பேசினர்.
பின்னர் மாலை 5.30 மணிக்கு உண்ணாவிரதம் முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த சிலரும் கூட முழுவதுமாக இல்லாமல், தலையைக் காட்டிவிட்டுப் போவதிலேயே குறியாக இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக