ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவில் முதன் முதலாக காஸினோ சூதாட்ட அரங்கம்!



வெளிநாடுகளில் உள்ளது போன்று காஸினோ எனும் சூதாட்ட அரங்கம், இந்தியாவில் முதன் முதலாக சிக்கிம் மாநிலத்தில் துவங்குகிறது. ஆடல்,பாடல், மது விருந்துடன் பணம் வைத்து சூதாடும் மையம் தான் காஸினோ. பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே இந்த மையம் உள்ளது.



கடற்கரையை ஒட்டியுளள சுற்றுலாத்தளங்களின் சுற்றுலா பயணிகளை கவரவும் வர்த்தக ரீதியாகவும், அன்னியச்செலவாணியை ஈட்ட இந்த காஸினோ இருந்து வந்தது. அந்த வகையில் சிக்கிம் மாநிலத்தின்‌ கேங்டாக் நகரில் , ஒடிசாவைச் சேர்ந்த மைபர்பேர் ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் என்ற நிறுவனம் 48 ஏக்கர் பரப்பளவில் 4மாடி கட்டிடத்தில் இந்த காஸினோவை துவக்குகிறது.



இது குறித்து இந்த நிறுவனத்தின் நிறுவனர் திலீப்ராய் கூறுகையில், இங்கு காஸினோ துவங்கவதன் மூலம் எனது கனவு நிறைவேறியுள்ளது. தற்போது உத்தரபிரதேசம், கோல்கட்டா, டில்லி, அரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்கள், நேபாளின் காத்மாண்டுவில் உள்ள காஸினோவிற்கு தான் சென்று வருவர் . இனி அவர்கள் சிக்கிம் மாநிலத்திற்கு திரும்பிவிடுவர்.



வெளிநாடுகளில் சிங்கப்பூர், ஹாங்காங், மெகூவா, காத்மாண்டு ஆகிய நகரங்கில் காஸினோ பிரபலமானது. இந்தியாவில் தற்போது பொது சூதாட்ட சட்டம் 1867-ன்படி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் காஸினோ மையத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் லைசென்ஸ் வழங்கப்படவில்லை. எனினும் 1976-ம் ஆண்டு திருத்த சட்டத்தின்படி கோவா மாநிலம் மற்றும் டையூ,டாமன் யூனியன் பிரதேசம் உள்ளிட்டவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு லைசென்ஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கு ஆன்லைன் காஸினோக்கள் இ‌ல்லை. இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் காஸினோக்கள் உள்ளன.



இந்நிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம், மலைப்பிரதேசமாகும். இங்கும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் இவர்களை ஈர்க்க அம்மாநிலத்தின் சூதாட்ட ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2005-ன் படி தலைநகர் கேங்டாக் நகரில் ஆன்லைன் சூதாட்ட முறையில் காஸினோ அமைகிறது. இதில் நுழைவு கட்டணமாக ரூ. 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 15 வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டவர்கள் மாநாடு நடத்துவதற்கென இங்கு 30 ஆயிரம் சதுரடியில் மாநாட்டு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூதாட்டத்தில் முறைகேடுகளை தடுக்க ,சூழல் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுளளது. மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை காஸினோவில் விளையாடலாம். இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் முற்றிலும் மின்னணு சாதனங்களே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு திலீப்ராய் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக