செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவிக்கும் சிறைக்கைதிகள்தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் சிக்கியுள்ளவர்கள்.
செய்தி 1 , கருணாநிதி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று கலைஞர் கூறியுள்ளார்.
முடிவெடுக்க இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் மத்திய அரசும், தமிழக அரசும் இந்தப் பிரச்சினையிலே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, இந்த மூவரின் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்திட வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்’’
செய்தி 2 , சீமான்: மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். மூவரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
செய்தி 3 , திருமாவளவன்: இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி இன்று நாடாளுமன்றத்தில் முழுக்கமிட்டார்.உள்ளே சென்று, அட்டையை உயர்த்தி பிடித்து மூவரின் தூக்கை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் முழக்கமிட்டார்.பின்னர் வெளிநடப்பு செய்தார்.
செய்தி 4 , பாமக: புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி மனித சங்கில் போராட்டம் நடைபெற்றது. தமிழர் கழகம் புதுக்கோட்டை பாவாணன், நாம் தமிழர் சத்தியமூர்த்தி, பாமக மாவட்ட செயலாளர். தரணி.ரமேஷ் மற்றும் 100க் கணக்காணோர் தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி 5 , நடிகர் சங்கம்: இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்னையில் இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் பாரதிராஜா, நடிகர், நடிகைகள், ஒன்றிணைத்துதூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி 6 , வக்கீல்கள்: இந்த நிலையில் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரிஐகோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீல்கள் சுஜாதா, கயல்விழி, வடிவாம்பாள் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மேலும் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் கிருஷ்ணகுமார், முருகபாரதி, சங்கரன் உள்பட ஏராளமான வக்கீல்கள் கையெழுத்து வேட்டை நடத்தி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
செய்தி 7 , மாணவர்கள்: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று திடீர்ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூக்கிலிட ஆதரவு: இந்து முன்னணி தலைவர் பயங்கரவாதி ராம.கோபாலன் இன்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனைக்கு தயாராகியுள்ளனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்படியானால்தான் எதிர் காலத்தில் இத்தகைய கொடுஞ்செயல்களை யாரும் செய்ய பயப்படுவார்கள்’’ என்று கூறினார்.
சிந்திக்கவும்: ஈழத்தமிழர்களின் 35 வருட போராட்டத்தை தங்கள் வல்லரசு என்கிற கனவினால் பலி வாங்கியது இந்தியா. தீவிரவாதி ராஜபக்சேக்கு உதவி செய்யவில்லை என்றால் சீன உதவிக்கு போகும் என்ற காரணத்தை சொல்லி ஒரு இனத்தையே அழிக்க காரணமாக இருந்தது. இதைஆட்சியில் இருந்து வேடிக்கை பார்த்த கருணாநிதி இன்று ஆட்சி போனதும் நாடகம் போடுகிறார்.
இந்த நடிகர், நடிகைகள் சினிமாவில் நடித்தது போக இதுபோல் சந்தர்ப்பங்களில் சிறப்பாக நடித்து தமிழர் உணர்வு இருப்பது போல் காட்டி கொள்வார்கள். திருமா முதல் ராமதாஸ் வரை அரசியலில் தமிழ் உணர்வை காட்டி சரிந்து போன தங்கள் கட்சிகளை தூக்கி நிறுத்தஅரும்பாடுபடுபவர்கள். வைகோ, சீமான், பழநெடுமாறன் போன்றவர்கள் தீவிர தமிழ் ஆதரவாளர்களாக இருந்தாலும் இவர்களின் போராட்ட வியூகத்தால் தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்ப்படவில்லை.
இதில் மாணவர்கள், வக்கீல்கள் இவர்கள் உண்மையிலேயே இன உணர்வுடன் போராடும் மக்களே! ஆனால் இவர்கள் இந்த போலி அரசியல் வாதிகளை நம்பாமல் புதிய போராட்ட முறைகளை வகுக்க வேண்டும். இனி தமிழர்கள் மத்திய அரசிடம் உயிர் பிட்ச்சை கேட்பதை விட்டு விட்டு வேறு வழிகளை தேடவேண்டும்.
மும்பை கலவர நாயகன், ஹிந்துத்துவா பயங்கரவாதி இன, மற்றும் மதவெறி பிடித்தவன்பால்தாக்ரே இவன் பண்ணிய கொலைகளும், கலவரங்களும் எத்தனை? எத்தனை? இவனை போலீஸ் இதுவரை ஒரு வழக்கிலும் கைது செய்யவில்லை ஏன்? என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று சொல்கிறார்கள். பால்தாக்ரேயை கைது செய்ய கோர்ட் உத்தரவு கொடுத்தது அதற்க்கு இந்த பயங்கரவாதி சொன்னான் என்மேல் கைவைத்தால் மும்பையே பத்தி எரியும் என்று! மாநில மற்றும் மத்திய அரசை பயமுறுத்தினான்.
ஒரு குறுகிய ஹிந்துத்துவா பயங்கரவாதியால் இப்படி சொல்ல முடியும் என்றால் ஆறரை கோடி தமிழ் மக்களே உங்களால் மூன்று தமிழர்களை காப்பாற்ற இது போல் சொல்ல முடியாதா?நாமும் சொல்வோம் ஈழத்தமிழர்கள் மூன்று பேரை தூக்கிலிட்டால் தமிழகமே பற்றி எரியும் என்று! கோழைகளாக இருந்தது போதும்! வீரத்தோடு எழுந்துவா! தமிழனின் வீரத்தை வரலாறு சொல்லட்டும்! எகிப்த்திய புரட்சி போல் தமிழகத்தில் ஒரு புரட்சி நடக்கட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக