ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆசஸ் புதிய ஸ்லைடர் டேப்லெட் - ஒரு பார்வை


விற்பனையில் ஆசஸ் ட்ரான்பார்மர் டேப்லெட் உலக அளவில் ஒரு பெரிய சாதனையை புரிந்தது. அதே சாதனையை எதிர்நோக்கி ஆசஸ் நிறுவனம் தனது புதிய டேப்லெட்டை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய டேப்லெட்டைப் பற்றி ஏராளமான செய்திகள் இணையதளத்தில் உலா வருகின்றன. ஆசஸ்நிறுவனம்
இந்த புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் முதன்முதலாக ஸ்லைடர் கீபோர்டு கொண்ட டேப்லெட்டை சந்தையில் அறிமுகப்படுத்தப் போகிறது.
ஸ்லைடர் கீபோர்டுடன் வருவதால் இந்தடேப்லெட்டின் விலையும் சற்று கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தங்களுடைய நெட்புக்கை மாற்ற விரும்புவோர் இந்த புதிய டேப்லெட்டை கண்டிப்பாக வாங்கலாம். இந்த புதிய ஸ்லைடர் டேப்லெட் ஆசஸின் ட்ரான்ஸ்பார்மர் பாட் டேப்லெட்டைப் போல் 10.1 இன்ச் அளவு எல்சிடி ட்ஸ்பிளே திரையுடன் 800 X 1280 பிக்ஸல் ரிசலூசனைக் கொண்டுள்ளது.
அதனால் இதன் திரை பார்ப்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஆசஸ் இஇஇ பாட் ஸ்லைடர் கிவெர்ட்டி கீபோர்டைக் கொண்டிருந்தாலும் இதில் ட்ராக் பாட் இல்லாதது சிறிய குறையாகத் தெரிகிறது. யுஎஸ்பி போர்ட் இன்டர்னல் மவுசுடன் எளிதில் தொடர்புகொள்ளக்கூடிய அளவில் உள்ளதால் தொடுதிரையிலிருந்து கீபோர்டுக்கு தகவல்களைப் பரிமாற்றும் சலிப்பான வேலை இருக்காது.
இதனுடைய ஓஎஸ் வி3.1 அளவு அப்க்ரேட் செய்யும் வகையில் ஆன்ட்ராய்டு ஹனிகோம்ப் 3.0ஐ பெற்றுள்ளது. இதனுடைய நிவிடியா டெக்ரா 2 டூவல் கோர் ப்ராஸஸர் இதில் வேலை செய்யும் பொழுது ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் இதன் இன்டர்பேஸ் 1ஜிபி ராமைக் கொண்டிருக்கிறது. சிறந்த வீடியோ படங்களை எடுக்கும் அளவிற்கு 5எம்பி கேமராவை வழங்குகிறது.
அதே போல் முகப்பில் விஜிஎ கேமராவைக் கொண்டிருப்பதால் தரமான வீடியோ சாட்டிங் மற்றும் காலிங் செய்யலாம். தொடர்பு வசதிகளைப் பார்க்கும் போது இது சிறிய எச்டிஎம்ஐயுடன் யுஎஸ்பி போர்ட் மற்றும் வைஃபை மற்றும் ப்ளூடூத் போன்ற தகவல் பரிமாற்ற வசதிகளை கொண்டுள்ளது.
மேலும் ஆசஸ்இஇஇ பாட் ஸ்லைடர் 32ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய 16ஜிபி இன்பில்ட் மெமரியைக் கொண்டிருக்கிறது. வரும் கோடையில் சில நாடுகளில் இதை அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள். இந்தியாவில் ஆசஸ்இஇஇ பாட் ஸ்லைடர் எப்பொழுது அறிமுகமாகும் என்று தெரியாவிட்டாலும் இதன் விலை ரூ.35,000மாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக