இந்திய பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியை படுகொலை செய்தனர் என்கிற வழக்கில் இந்தியாவில் குற்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களான முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் தூக்கில் தொங்க விடப்பட உள்ளார்கள்.
பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேலிடம் இவர்கள் கோரி இருந்தனர்.
ஆயினும் இவர்களின் கோரிக்கையை ஜனாதிபதி பட்டேல் கடந்த வாரம் நிராகரித்து விட்டார்.
இவர்களை தூக்கில் இட வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது.
1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தற்கொலைப் பெண் போராளியான தனு மனித வெடிகுண்டாக சென்று ராஜிவ் காந்தியை கொன்று இருந்தார்.
ராஜிவ் படுகொலைக்கு உதவி, ஒத்தாசை ஆகியவற்றை வழங்கினார்களென முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வரும் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக காணப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டனர்.
மூன்று ஆண்களுக்கும் வழங்கப்பட்டு இருந்த மரண தண்டனையை இந்திய உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்திப்படுத்தியது. ஆயினும் நளினிக்கு உரிய தண்டனையை ஆயுள் தண்டனை ஆக்கியது. இந்நிலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை ஆண்கள் மூவரும் கோரி இருந்தனர்.
2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் எவருக்கும் இது வரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
14 வயதுப் பாடசாலைச் சிறுமியை கற்பழித்து கொன்றமைக்காக முன்னாள் பாதுகாப்பு ஊழியரான 41 வயது நபர்தான் கடையாக தூக்கில் போடப்பட்டார்.
இதே நேரம் தூக்கில் போடுகின்ற தொழிலாளர்களை கண்டுபிடிக்கின்றமை மிகவும் அபூர்வமாக உள்ளது. அநேகர் இறந்து விட்டனர் அல்லது ஓய்வு பெற்று விட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக