ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கருணாநிதி விளக்கம் தை மாதத்தை புத்தாண்டாக அறிவித்தது ஏன்? பதிவு செய்த நாள் : 8/24/2011 2:52:28 கருத்துகள் கருத்துகளை தெரிவிக்க சென்னை : தை மாதம் முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு ஏன் கொண்டு வரப்பட்டது என்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து, சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தை நீக்கும் புதிய மசோதா தமிழக சட்டப்பேவையில் நேற்று அதிமுக அரசு தாக்கல் செய்தது. இதுதொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நிருபர்கள் சந்தித்து கேள்வி எழுப்பினர். அப்போது கருணாநிதி அளித்த பதில் வருமாறு: தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு பதிலாக, சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் வகையில், அதிமுக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளதே.? மறைமலையடிகள் தலைமையில் 1921ம் ஆண்டு 500 புலவர்கள் கூடி, கலந்துரையாடி, ஆழமாக விவாதித்து, அப்படி ஆய்ந்தறிந்து அறிவிக்கப்பட்ட ஒன்றுதான்; திருவள்ளுவர் ஆண்டு என்பதும் & ஆண்டு தொடக்கம் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் நாளில்தான் என்றும் முடிவு செய்தனர். அந்த 500 தமிழ்ப் புலவர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவின் அடிப்படையில்தான் திமுக ஆட்சி, தை மாதம் முதல் நாளை தமிழாண்டுத் தொடக்க நாள் என்றும், அதையொட்டிதான் திருவள்ளுவர் ஆண்டு என்றும் வரையறுத்து கொண்டாடி வருகிறோம். திமுக அரசின் சட்டத்தை ரத்து செய்து, அதிமுக அரசு பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதை எதிர்த்திருக்கிறார்களே? அவர்களின் தமிழ் உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன்.




சென்னை : தை மாதம் முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு ஏன் கொண்டு வரப்பட்டது என்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து, சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது
. அந்த சட்டத்தை நீக்கும் புதிய மசோதா தமிழக சட்டப்பேவையில் நேற்று அதிமுக அரசு தாக்கல் செய்தது. இதுதொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நிருபர்கள் சந்தித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது கருணாநிதி அளித்த பதில் வருமாறு:

தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு பதிலாக, சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் வகையில், அதிமுக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளதே.? மறைமலையடிகள் தலைமையில் 1921ம் ஆண்டு 500 புலவர்கள் கூடி, கலந்துரையாடி, ஆழமாக விவாதித்து, அப்படி ஆய்ந்தறிந்து அறிவிக்கப்பட்ட ஒன்றுதான்; திருவள்ளுவர் ஆண்டு என்பதும் & ஆண்டு தொடக்கம் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் நாளில்தான் என்றும் முடிவு செய்தனர்.

அந்த 500 தமிழ்ப் புலவர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவின் அடிப்படையில்தான் திமுக ஆட்சி, தை மாதம் முதல் நாளை தமிழாண்டுத் தொடக்க நாள் என்றும், அதையொட்டிதான் திருவள்ளுவர் ஆண்டு என்றும் வரையறுத்து கொண்டாடி வருகிறோம். திமுக அரசின் சட்டத்தை ரத்து செய்து, அதிமுக அரசு பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதை எதிர்த்திருக்கிறார்களே? அவர்களின் தமிழ் உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக