ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பாக்கியை தராவிட்டால் கச்சா எண்ணெய் நிறுத்தம் இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை


நிலுவைத் தொகையை உடனடியாக அளிக்காவிட்டால், கச்சா எண்ணெய் தருவதை நிறுத்தி விடுவோம் என இந்தியாவை ஈரான் எச்சரித்துள்ளது. உலக பொருளாதாரதடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், நிலுவைத் தொகையை உடனடியாக அளிக் வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஈரானிடமிருந்து சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. கடந்த 6 மாதங்களாக கச்சா எண்ணெய்க்கான தொகையை இந்தியா அளிக்கவில்லை. ஆசிய, அய்ரோப்பிய வங்கிகள் மட்டுமின்றி சமீபத்தில் ஜெர்மன் வங்கியும் இந்திய அரசின் கோரிக் கையை ஏற்கவில்லை. இதே நிலை நீடித்தால் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து கச்சா எண்ணெய் தருவதை நிறுத்தப் போவதாக ஈரான் பெட்ரோலிய அமைச்சகம் எச்சரித் துள்ளதாக இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் மீது உலக பொருளாதார தடை உள்ளதால், அந்நாட் டுக்கு பிற நாடுகளின் கரன்சிகளில் அளிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் கச்சா எண் ணெய்க்கு ஈடாக இந்தியா தங்கத்தை அளித்து இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக