ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மெக்சிகோவில் துணிகரம்: சிறையில் இருந்த கணவரை சூட்கேசில் மறைத்து கடத்திய பெண்:போலீஸ் சோதனையில் சிக்கினாள்


மெக்சிகோவில் துணிகரம்: சிறையில் இருந்த கணவரை சூட்கேசில் மறைத்து கடத்திய பெண்:போலீஸ் சோதனையில் சிக்கினாள்மெக்சிகோவை சேர்ந்தவர் ரமீரஷ். சட்டவிரோதமாக ஆயுதம் கடத்தியதாக இவரை போலீசார் கைது செய்தனர். இதற்காக அவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அவர் கரீபியன் மாகாணத்தில் உள்ள செதுமால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது மனைவி மரியா டெல்மார் அர்ஜோனா (19). அவர் தனது கணவர் ரமீரஷை பார்க்க செதுமால் சிறைக்கு வந்து இருந்தார்.  
 
திரும்பி சென்ற போது, ஒரு சூட்கேசை இழுத்து சென்றார். அப்போது அவர் பதட்டத்துடன் காணப்பட்டார். இதனால் சந்தேகம் அடைந்த சிறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.
 
எனவே அவரது சூட்கேசை திறந்து பார்த்தனர். உள்ளே அவரது கணவர் ரமீரஷ் கால், கைகளை மடக்கி படுத்தப்படி படுத்திருந்தார். அவரை அர்ஜோனா சூட்கேசில் வைத்து சிறையில் இருந்து வெளியே கடத்தியது தெரியவந்தது.
 
இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக