பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ரியாஸ் முகமது (54). தனது குடும்பத்தாருடன் துபாயில் வசித்து வருகிறார். அவர் கடந்த மாதம் 23-ம் தேதி இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக சென்னைக்கு வந்தார். அவருக்கு கடந்த 2003-ம் ஆண்டு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு மீண்டும் இதய நோய் தீவிரமடைந்துள்ளது.
அவர் குடும்பத்தார் சென்னையில் இருக்கும் டாக்டர் செரியன் ஹார்ட் பவுண்டேஷன் பற்றி இணையதளத்தில் பார்த்தனர். அவர் குணமடைய இது தான் சரியான இடம் என்று எண்ணி உடனே சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டனர்.
அவருக்கு மூளைச்சாவு அடைந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த பாலாஜி (32) என்பவரின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 10-ம் தேதி சென்னையில் உள்ள பிரண்ட்லைன் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. இது சுமார் 6 மணி நேரம் நடந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தற்போது ரியாஸ் குணமடைந்து வருகிறார். இன்னும் 15 நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்யப் போவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நாங்கள் பாகிஸ்தானியர்களாக இருந்தாலும், எங்களை அன்போடு கவனித்துக் கொள்கின்றனர் என்று ரியாஸின் மகள் ஹசீனா குரல் தழுதழுக்கக் கூறினார். ரியாஸின் மனைவி தமிழர்களின் பாசத்தைப் பார்த்துவிட்டு நெகிழிந்து போயுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக