குடும்ப நலன் எனும் ஆடையினை(த்) தமிழ்
அன்னைக்கு போர்த்தி அவள் கண்களை
இலவசம் எனும் பாசக் கயிற்றினால் கட்டி
அதன் மேல் பிறர் கண்பாடதவாறு
மக்கள் சொத்தினை வாரிச் சுருட்டி- தன்
மக்கள் வாழ்வு மேம்பட வைத்து இறுதியில்,
தர்க்கமானது இலவசங்கள் வாயிலாக
இவரிடமிருந்து வெளித்தெரிகின்றது
எனும் ஜீரணிக்க முடியாத உண்மை
மக்கள் மனங்களிற்குத் தெரியவர
ஆசனப் பகுதியில் இறுக்கி ஒட்டியிருந்த
இலகுவில் கழற்றி எறிந்திட முடியாத
ஆட்சி எனும் கட்டிலிருந்து தூக்கியெறியப்பட்டார்
எங்கெல்லாம் சறுக்கல்கள் இருக்கிறதோ
அங்கெல்லாம் தன் இரட்டை இலைதனை
பறக்க விட்டு, கூடவே தோடம்பழத்தின்
வாசனையில் நவீன பெர்ஃபியூம் செய்து,
ஐயா தொடங்கி வைத்ததை சிக்கெனப் பிடித்து
பழைய கலர் டீவிக்குப் பதிலாக மிக்ஸி- கிரைண்டர்
எனும் புதிய கார்ட்டூன் வடிவம் கொடுத்து
தன் நிலையினை விளக்கிட
தக்க தருணம் பார்த்திருந்தார் அம்மா!
மக்களை மந்தை மேய்க்க வைத்தால்
இன்னும் சிறிது காலம் தான் கட்டிலில்
கனிந்து மகிழலாம் என்பதை உணர்ந்து
கால் நடைகள் வழங்கி, கல்லூரி
மாணவர்களிற்கு மீள் வடிவம் செய்த
தோடம் பழ இலையின் நாமம் பொறித்த
லப்டாப் வழங்கி மாற்று வழியின்றி
மக்கள் அடுத்த மந்திரியாய் தன்னைத்
தெரிவு செய்வார் என்பதை உணர்ந்து
இடை வெளியில் தன் இடாம்பீக இடை நகர்த்தி
ஐயாவை வீழ்த்திய ஆரவாரத்தோடு
ஆட்சியில் நுழைந்தார் அம்மா!
வாக்களித்த உள்ளங்களில் ஏக்கம் நிறைந்திருக்க- தான்
தமிழன்னையின் நறு மணம் வீசும் சரிகை அணியேன்
எனச் சபதமிட்டு; சட்ட மன்றமெனும் கட்டிடத்தில்
ஐயாவின் வியர்வை நாற்றம் இருப்பதால்- அங்கே
கால் வைத்தல் தன் பெண்மைக்கு இழுக்கென(ப்)
பெருங் கதை பேசினார் அம்மா!
பாட நூல்கள் யாவும் புரட்டப்பாடது
குப்பையிலே வீசுதல் தோடம் பழத்தின்
வேர்களுக்கு உரமாகும் எனும் நினைப்பில்
சமர்ச்சீர் கல்வியின் சரீரம் கொய்தார்!
கலைஞர் கொண்டு வந்த கலர் டீவியில்
கொஞ்சம் மெரு கூட்டி சத்தமின்றி சமச்சீர் எதிர்ப்பு
படம் ஓட்ட நினைத்த அம்மாவிற்கு
ஆப்பாய் உச்ச நீதிமன்றம் உணர்வூட்டியிருக்கிறது!
இப்போது கலர் டீவியில் கருத்து(ப்) படம் தான் ஓடுகிறது,
மக்களிற்கான செயல்களோ பழைய கறுப்பு வெள்ளை
படம் எனும் நினைப்பில் புறக்கணிக்கப்படுகிறது;
அடிக்கடி அரங்கத்தை மகிழ்விக்கும் நகைச்சுவை
இளவல்கள் சீமானும்- வைகோவும் புதியதோர்
தொடருக்காய் காத்திருக்கிறார்கள் போலும்-
அனல் பறக்கும் பேச்சில் அம்மா குளிர் தண்ணீர்
ஊற்றியதால் காதில் சீழ் வடிய வைக்கும்
பஞ்சு வசனங்களை இந் நாளில் எந்த
காற்றலையும் தாங்கி வருவதில்லை!
கலைஞரின் கலர் டீவி இப்போ அம்மாவின் காலடியில்,
கலைஞர் கை கட்டி மௌனமாய் நடப்பவற்றை(ப்)
பார்த்திருந்து தன் பேரனை(க்) களமிறக்கும்
நாளுக்காய் காத்திருக்கிறாரோ- தெரியவில்லை
எவர் மாறினாலும், திரையில் தெரிவதென்னவோ பழைய
கீறல் விழுந்த சீடி தானே!!
அன்பிற்குரிய நண்பரே, என் பதிவினைத் தாங்கள் காப்பி செய்து இங்கே எழுதியிருக்கிறீங்க. ப்ளீஸ் இந்தப் பதிவினை உங்கள் வலையில் இருந்து நீக்க முடியுமா?
பதிலளிநீக்குஇது அப்பட்டமான திருட்டு எதற்கு இந்த வேலை நண்பரே...http://www.thamilnattu.com/2011/07/blog-post_08.html
பதிலளிநீக்கு