ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

திகார் ஒலிம்பிக்" ஸ்பெக்ட்ரம் கைதிகளும் விளையாடுகிறார்கள்!

, புதுடில்லி: திகார் ஜெயிலில் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் கைதிகள் இடையிலான விளையாட்டு போட்டியில் ஜெயிலில் இருக்கும் முக்கிய உயர் அந்தஸ்தில் இருந்த கைதிகள் பலர் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

திகார் ஒலிம்பிக்ஸ் என்பது ஜெயிலின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. இது கடந்த 15 ஆண்டு காலமாக நடந்து வருகிறது.  இந்த போட்டியில் ஒரே ஜெயிலுக்குள் உள்ள கைதிகள் , ஏனைய ஜெயில் கைதிகள் மோதிக்கொள்ளும் படி ஏற்பாடு செய்யப்படுகிறது.

இத்துடன் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை, காமன்வெல்த் ஊழலில் சிக்கி உள்ளே இருக்கும் கல்மாடி செய்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் வாலிபால், கிரிக்கெட், கூடைப்பந்து, கோக்கோ, கபடி, செஸ், கேரம்போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளில் போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டிகள் நடத்தப்படுவதன் மூலம் கைதிகள் மிகுந்த உற்சாகம் அடைவர். 

இந்த போட்டியில் ஸ்பெக்ட்ரம் ஊழலல் ராஜா, அவரது உதவியாளர் சந்தோலியா, கனிமொழி, தொலைத் தொடர்பு செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பல்வா, இயக்குனர் வினோத் சோயங்கா. யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொடர்புப் பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா ஆகியோரும் இந்த போட்டியில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயில் அதிகாரிகளுடன் கல்மாடி அரட்டை: இந்நிலையில் திகார் ஜெயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நீதிபதி பிரிஜேஸ் குமார் கார்க் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இவர் செல்லும் போது கல்மாடி ஜெயில் சூப்பிரண்டுடன் அவரது அறையில் டீ, பிஸ்கட் எடுத்துக் கொண்டபடி ஹாயாக சிரித்து பேசிக்கொண்டிருந்தாராம். இது குறித்து அவர் விளக்கம் கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக