சென்னை, : சன் பிக்சர்ஸுக்கு எதிரான மோசடி மற்றும் மிரட்டல் புகார் தொடர்பாக போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜராக கலாநிதி மாறனுக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.கலாநிதி மாறன் தற்போது வெளியூரில் உள்ளதாகவும், ஜூலை 26-ம் தேதிதான் அவர் சென்னை திரும்புவார் என்றும் தெரிவித்து போலீஸ் முன்பு அவர் ஆஜராக அவரது வழக்கறிஞர் காலஅவகாசம் கேட்டிருந்தார்.இந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் அசோக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ 83 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும், திருப்பிக் கேட்டபோது தன்னை மிரட்டியதாகவும் கூறி திரைப்பட விநியோகஸ்தர் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின்பேரில் சன் டிவியின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் முன்பு ஆஜராகுமாறு கலாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.கலாநிதி மாறனுக்காக அவரது வழக்கறிஞர் ஆஜராகி, கால அவகாசம் கேட்டு கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை போலீசார் ஏற்றுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக