புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய வில்லியம் தம்பதி!
கலஹாரிக்கு விஜயம் மேற்கொண்ட வில்லியத்திற்கு அப்பகுதி மேயர் நஹீட் நென்சி வெள்ளை நிற cowboy தொப்பி வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதேவேளை கலஹாரியில் உள்ள 6 வயதுக் குழந்தையின் ஆசையையும் வில்லியம் கேட் தம்பதிகள் நிறைவேற்றத் தவறவில்லை.
டயமன்ட் மார்ஷல் என்ற இந்த 6 வயதுக் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
மார்ஷலுக்கு இரண்டு சத்திரசிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வில்லியம் மற்றும் கேட்டின் திருமண விழாவை வைத்தியசாலையில் கண்டுகளித்துள்ளது.
தனது மிகப்பெரிய ஆசை வில்லியம் மற்றும் கேட்டை பார்ப்பதாகும் என்று அங்கிருந்து சிறிய குறிப்பொன்றை இந்த குழந்தை எழுதியுள்ளது.
இந்த குழந்தையின் மிகப்பெரிய ஆசையை நிறைவேற்றும் முகமாகவும் வில்லியம், கேட் தம்பதிகள் கலஹாரி பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்தக் குழந்தையை கட்டியணைத்து கேட் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மார்ஷலுடைய தந்தை இதுபற்றி விபரிக்கையில், “இது மார்ஷலுக்கு சிறந்த செயலூக்கியாக அமைந்திருக்கும்.
இது எமக்கு சிறந்த வெற்றியாக அமைந்துள்ளது. இதை நினைத்து எனது குடும்பத்தினரும் நண்பர்களும் மிகவும் சந்தோசமடைகிறோம்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக