இலங்கையுடனான உறவுகளின் யதார்த்த நிலைமைகளை ஜெயலலிதா புரிந்து கொண்டுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலிதா தன்னைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரங்களில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என அதிர்வு இணையம் அறிகிறது. இதேவேளை பிரசாத் காரியவசம் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலிருந்து, இந்தியா திரும்பியதாகவும் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்திய இலங்கை உறவு தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜெயலலிதாவிற்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.
இலங்கையுடனான உறவுகளின் யதார்த்த நிலைமைகளை ஜெயலலிதா புரிந்து கொண்டுள்ளதாக இந்தியப் பிரதமர் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும். கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது இலங்கைத் தூதுவர் அவரைச் சென்று சந்தித்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் என்ன உறவு இருக்கிறது என்று விளங்கப்படுத்தவில்லை. ஆனால் செல்வி ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு ஏன் விளங்கப்படுத்த முனைகிறது ? கருணாநிதி போலிவேஷம் ஏற்கனவே இலங்கைக்குத் தெரிந்த விடையம் ஆனால் செல்வி ஜெயலலிதா இலங்கையோடு முரன்பட்டால் அது ஆபத்து என இலங்கை அரசு நன்கு அறிந்துவைத்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் செல்வி ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கள் தம்மைப் பாதிக்காது என்றும் தாம் மாநில அரசுகளோடு பேசுவது இல்லை மத்திய அரசோடு மட்டுமே பேசுவோம் என இறுமாப்பாக பதில் சொன்ன இலங்கை, இன்று ஏன் செல்வி ஜெயலலிதாவோடு பேசவேண்டும். திரும்பவும் புலிகள் உங்களை கொல்ல நினைக்கிறார்கள் என்று ஒரு புரளியைக் கிளப்பிவிடவா ? அதனூடாக செல்வி ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் ஆதரவு நிலையை மாற்ற இலங்கை அரசு தற்போது பகிரங்க பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. செல்வி ஜெயலலிதாவை மாற்ற முடியும் என இலங்கை ஒரு பகல்கனவு காண்கிறது.
இருப்பினும் கடந்த காலங்களில் இலங்கை செல்வி ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளை எவ்வாறு உதாசீனம் செய்தது என்பதனை அவருக்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கவேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக