ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கனிமொழி முதல் நடிகை மரியா வரை ஜாமீன் இல்லாமல் ஜெயில் வாசம்; சட்டம் என்ன சொல்கிறது?

கனிமொழி முதல் நடிகை மரியா வரை ஜாமீன் இல்லாமல்
 
 ஜெயில் வாசம்;
 
 சட்டம் என்ன சொல்கிறது?திகார் ஜெயில்...ஒட்டு மொத்த இந்தியாவையும் ஏன்? உலகத்தை கூட திரும்பி பார்க்க வைத்துள்ளது. எத்தனை பூஜ்யம் போட்டு எப்படி எண்ணுவது? என்று எண்ணிப் பார்த்து மலைக்க வைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார்,
அரிநாயர் (ரிலையன்ஸ்), கரீம் மொரானி (சின்யூக் பிசினஸ்), வினோத்கோயங்கா, ஷாகித் பல்வா, ஆசிப் பல்வா (சுவான்), தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசா உதவியாளர் சந்தோலியா விளையாட்டு ஊழலில் சிக்கிய முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ் கல்மாடி உள்பட பலர் திகார் ஜெயிலுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள்.
ஆ.ராசா 140 நாட்களை கடந்து விட்டார். கனிமொழியும் 40 நாட்களை ஜெயிலில் கழித்து விட்டார். இவர்களில் யாருக்கும் இப்போதைக்கு ஜாமீன் கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு கீழ் கோர்ட்டை அணுகுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு சுத்தியலை ஓங்கி அடித்து விட்டது. இன்னும் எத்தனை நாளைக்கு இவர்கள் ஜெயிலில் இருப்பார்கள்? அனுமார் வாலை போல் அடுத்து யார்? என்று நீண்டு கொண்டே செல்வதால் 2ஜி வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கலாவது எப்போது என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. அதுவரைக்கும் இவர்கள் பெயிலை பற்றி யோசிக்காமல் ஜெயிலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சரி... இது இவர்கள் வழக்கு!
மும்பை டி.வி. தயாரிப்பாளர் கொலை வழக்கில் கன்னட நடிகை மரியாவுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது. ஆனால் 3 ஆண்டுகளாக மரியா ஜாமீன் கிடைக்காமல் ஜெயிலிலேயே இருந்துள்ளார். தற்போது 3 ஆண்டுகளை ஜெயிலில் கழித்து விட்டதால் மரியா விடுதலை ஆகி இருக்கிறார். ஒரு வேளை கோர்ட்டு மரியாவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து இருந்தால் அநியாயமாக ஒரு ஆண்டு கூடுதலாக ஜெயிலில் இருந்திருப்பாரே என்ற கேள்வி எல்லோரிடமும் எழுவது நியாயம்தான்!
ஜெயில் தண்டனை அறிவிப்பதற்கு முன்பு எத்தனை நாள் பெயில் இல்லாமல் ஜெயிலில் இருப்பது? இந்த நடைமுறை சரிதானா? கோர்ட்டு எந்த அடிப்படையில் இந்த வழக்குகளை அணுகுகிறது?
இதுபற்றி ஐகோர்ட்டு வக்கீல் வானதி சீனிவாசன் கூறியதாவது:-
குற்றத்தின் தன்மையை பொறுத்தும், குற்றம் சாட்டப்பட்டவரின் செல்வாக்கு, பின்னணி மற்றும் அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஜாமீன் மனுவை பரிசீலிப்பார்கள்.
குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட வரை வெளியே விட்டால் வழக்கை எந்த வகையில் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்வார்கள். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சிலர் வழக்கு முடியும் வரை சுமார் 7 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள். பொதுவாக குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுபவர்களை வெளியே விட்டால் சாட்சிகளை மிரட்டுவார்கள், ஆதாரங்களை அழித்து விடுவார்கள் என்பதால்தான் குற்றப்பத்திரிகை தயாரித்து தாக்கல் செய்யும் வரை ஜாமீனில் விட மாட்டார்கள்.
2ஜி வழக்கை பொறுத்த வரை தனிப்பட்ட நபருக்கோ, நிறுவனத்துக்கோ ஏற்பட்ட சாதாரண இழப்பாக கோர்ட்டு எடுத்து கொள்ளாது. ஒட்டு மொத்த நாட்டின் பிரச்சினை. எனவே சுப்ரீம் கோர்ட்டு நேரடியாக கண்காணிக்கிறது. நமது நாட்டையும் தாண்டி வெளி நாடுகளில் கூட விசாரணை நடப்பதாக கூறுகிறார்கள். எனவே இன்னும் அதிகமான குற்றப்பத்திரிகையை கோர்ட்டு எதிர்பார்க்கலாம்.
குற்றத்தின் தன்மை, குற்றம் சுமத்தப்பட்டவர்களின் பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு சொல்லும் வரை கூட கோர்ட்டு ஜாமீன் வழங்காமல் இருக்க முடியும். இந்த வழக்கை பொறுத்த வரை சுப்ரீம் கோர்ட்டு தனி நீதிமன்றத்தை அமைத்துள்ளது. தனியாக அரசு வக்கீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த கோர்ட்டு தினமும் 2ஜி வழக்கை மட்டும்தான் விசாரித்து வருகிறது. எனவே வழக்கு விசாரணை முடிய அதிக காலம் ஆகும் என்று கூற முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், என் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டு விட்டார்கள். இதனால் நான் மிகுந்த மன உழைச்சலுக்கு ஆளாகி விட்டேன் என்று அரசியல் சாசன பிரிவு 226, மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 482-ன்படியும் மனுதாக்கல் செய்யலாம். ஆனால் அதற்கு உறுதியான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களின் தன்மையை பொறுத்து அந்த மனுவை விசாரிப்பதும், விசாரிக்காமல் இருப்பதும் கோர்ட்டின் உரிமை. ஒருவர் தண்டனை காலத்தை விட கூடுதலாக ஜெயிலில் இருக்கும் சூழ் நிலை ஏற்பட்டால் அதற்கு எந்தவித நிவாரணத்துக்கும் சட்டத்தில் இடமில்லை.
விடுதலை செய்யப்படும் போது கூட அவர் குற்றவாளி இல்லை என்று கோர்ட்டு சொல்லாது. சந்தேகத்துக்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்க தவறியதால் விடுதலை செய்யப்படுவதாகத்தான் கோர்ட்டு கூறும். இதன் மூலம் விடுதலை செய்யப்பட்டவர் குற்றமே செய்யாதவர் என்று அர்த்தமாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக