அவுஸ்திரேலியாவில் பாலி தீவுப் பாணியிலமைக்கப்பட்ட தனது தீவை ஓர் இரவிற்கு 17,000 டொலர்களுக்கு வாடகைக்கு விடத் தொடங்கியுள்ளார் சேர் றிச்சாட் பிரான்சன். ஆனால் இதிலுள்ள விசேடம் என்னவெனில் இங்கு வரும் விருந்தினர்கள் அதிகளவு சத்தமிடாமல் இருக்கவேண்டுமென எச்சரிக்கப்படுகின்றனர்.
மேக்ஸ்பேஸ் தீவு எனப்படும் சிறிய, இதய வடிவான தீவில் 500,000லீ. குளமும் 15 பேருக்கான குளியல் தொட்டிகளும் வெளிப்புறத் திரையரங்கு ஒன்றும் 22 பேருக்கான அறைகளும் உள்ளன.
இதன் எல்லாக் கட்டடங்களும் மரம் மற்றும் வைக்கோலாலான குடிசைகளும் பாலி மற்றும் ஜாவாத் தீவுகளின் பாணியில் கட்டப்பட்டுள்ளன. இத்தீவிற்குச் செல்ல கப்பல் பயன்படுத்தப்படுகின்றது.
8 பேருக்கு ஓர் இரவில் 7,990 டொலர்களும் விடுமுறைக் காலங்களில் 22 பேருக்கு 16,990 டொலர்களும் அறவிடப்படுகின்றன. ஆனால் இந்தப் பெரும் பணக்காரரின் இன்னொரு தீவான, பிரிட்டி வேர்ஜின் தீவுகளிலுள்ள நெக்கர் தீவைவிட இது செலவு குறைந்ததே. அதற்கு ஓர் இரவிற்கு 50,000 அறவிடப்படுகின்றது என்றால் பாருங்களேன்.
இருப்பினும், குயின்ஸ்லாந்தின் சன்லைன் கோஸ்ற்றிலுள்ள பிரபல்யமான விடுமுறைத்தள நகரான நூசாவின் ஆற்றில் அமைந்துள்ள இத்தீவிற்கு வருவார்களென எதிர்பார்க்கப்படும் விருந்தாளிகளுக்கும் அமைதியாக இருக்குமாறே வேண்டுகோள் விடப்படுகின்றது.
அங்கு விருந்தினரைப் பராமரிக்கும் பணியாளர்கள், விருந்தினர் வந்தடைந்ததும் முதலில் விருந்துகளின் போது எவ்வாறு செயற்படுவது என்பது பற்றியும் சத்தம் ஏற்படுத்தப்படுவது பற்றியும் தமது அறிவுறுத்தல்களைப் பட்டியலிடுவர். இந்தச் சுற்றுலாத் தள இணையத்தில் இதுபற்றி விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பு 25 ஏக்கர் சேற்றுநிலமாக இருந்த பிக் தீவு என்றழைக்கப்பட்ட இத்தீவை சேர் றிச்சாட் 2007 இல் 3 மில்லியனிற்கு வாங்கினார். அவரும் வேர்ஜின் அவுஸ்திரேலியாவின் இன்னொரு கண்டுபிடிப்பாளரான பிறெற் கோட்ஃபிறேயும் சேர்ந்து இத்தீவைத் தமது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அலுவலகப் பணியாளர்களுடனும் விடுமுறைகளையும் விருந்துகளையும் கொண்டாடப் பயன்படுத்திவந்தனர்.
மேக்பீசிற்கு நானும் பிறெற்றும் போகாமல் விட்டபோது தான் அதனை மற்றவர்கள் அனுபவிப் பதற்கானதொரு சிறப்பான தளமாக அமைக்கலாமெனத் தீர்மான மெடுத்தோம் என றிச்சாட் கூறினார்.
அவுஸ்திரேலியாவிலேயே தனக்குப் பிடித்த இடமாக நூசாவைக் கூறும் சேர் றிச்சாட் வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகள் அங்கு போய்வருவதாகக் கூறினார்.
நான் எவ்வளவிற்கு நூசாவைக் காதலிக்கிறேனென எல்லாருக்கும் தெரியும்…. இப்போது உலகின் இந்த அழகான பகுதியைக் கண்டுகழிக்க வருமாறு அனைவரையும் அழைக்கின்றேன். வேர்ஜின் குறூப் ஆனது அவுஸ்திரேலியாவில் பலமானதொரு நிலையைக் கொண்டுள்ளது.
வேஜின் அக்ரிவ் (Virgin Active) சுகாதார அமைப்புகளின் புதிய தொகுதி ஒன்றிற்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வாரம் மட்டும் செலவழித்ததென்பதன் மூலம் இதன் நிலையை அறிந்துகொள்ளலாம்.
எதன் மூலமும் நாம் சிறந்தவற்றையே செய்ய முயற்சிக்கின்றோம். இப்போது எங்களிடம் 300 சுகாதார அமைப்புகள் உலகெங்கும் செயற்பட்டு வருகின்றன. இது எங்களுக்கு மிகவும் வெற்றிகரமான வியாபாரமாக உள்ளது.
அத்துடன் வேஜின் வர்த்தகக் குறியும் அவுஸ்திரேலியாவில் மிகவும் பலமுள்ளதாக உள்ளதுடன் சுகாதார அமைப்புக்களும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்ற மடைந்துள்ளன என்றார் சேர் றிச்சாட்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக