ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

திமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: ஸ்டாலினை செயல் தலைவராக்க முடிவு?



கருணாநிதி சுறுசுறுப்பாக இருக்கையில் புதிய தலைவர் தேவையில்லை: அழகிரி
karunanithi- sralinசென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓய்வளிக்கும் வகையில், தற்போது பொருளாளராக உள்ள மு.க.ஸ்டாலினை, செயல் தலைவர் பதவியில் அமர்த்த பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அழகிரி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதால் பெரும் பரபரப்பும் நிலவுகிறது.


திமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசல் அனைவரும் அறிந்ததே. ஸ்டாலின் தலைமையில் ஒரு கோஷ்டியும், அழகிரி தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்படுகின்றன. இதுபோக கனிமொழி குரூப், தயாநிதி மாறன் குரூப் என குட்டி குட்டி குரூப்களும் உள்ளன.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் பெரும் தோல்விக்குப் பின்னர் திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள் நாளையும், மறுநாளும் கோவையில் நடைபெறவுள்ளது.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தி்ல் தனக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் நேரடியாகவே தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால் கருணாநிதி பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே கடும் சண்டை மூண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ஸ்டாலினை செயல் தலைவராக்கப் போவதாக ஒரு தகவல் பரவியுள்ளது. இதுகுறித்த கோரிக்கையை ஸ்டாலின் தரப்பில், மூத்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கூட்டத்தில் வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

கருணாநிதி காலத்திலேயே தனது அடுத்த வாரிசு யார் என்பதை அவர் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அப்போதுதான் பின்னாளில் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம் என்ற கருத்து திமுகவினரிடம் நிலவுகிறது.

ஆனால், அழகிரி தரப்பு இதை எதிர்த்து காய் நகர்த்தத் திட்டமிட்டுள்ளது. கருணாநிதிதான் கடைசி வரை தலைவர், அவருக்குப் பிறகுதான் அடுத்த தலைவர் யார் என்பது குறித்துப் பேச வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தப் போவதாக கூறப்படுகிறது.

இதற்குத் தோதாக ஸ்டாலினை விரும்பாத பல மூத்த தலைவர்களின் ஆதரவை அழகிரி பெற்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுபோக தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும், கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

திமுகவினர் மீது அதிமுக அரசு போட்டு வரும் நில அபகரிப்பு வழக்குகளை எதிர்கொள்வது குறித்தும், சமச்சீர் கல்வி பிரச்சனை, புதிய தலைமை செயலக கட்டுமானம் குறித்த விசாரணைக் கமிஷன் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

திமுகவைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களுக்குப் பதிலாக புதிய அமைச்சர்களை பரிந்துரைக்க கருணாநிதி மறுத்துவிட்டாக். இதையடுத்து மத்திய அமைச்சரவையில் தி.மு.கவுக்காக 2 இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். அது குறித்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்படலாம்.
கருணாநிதி சுறுசுறுப்பாக இருக்கையில் புதிய தலைவர் தேவையில்லை: அழகிரி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சுறுசுறுப்பாகத் தான் உள்ளார். அதனால் புதிய தலைவர் தேவையில்லை என்று தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

நாளையும், நாளை மறுநாளும் கோவையில் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சி பொருளாளரான முக ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் முக அழகிரி கலந்துகொள்ள மாட்டார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

இதனால் திமுக கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்னும் தகவலை அழகிரி மறுத்துள்ளார்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திமுக தலைவர் கருணாநிதி சுறுசுறுப்பாக கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் தற்போதைக்கு கட்சித் தலைமையை மாற்றத் தேவையில்லை. இக்கட்டான சூழ்நிலையிலும் கட்சியை வழி நடத்தும் ஆற்றல் அவருக்கு உள்ளது.

கோவையில் நடக்கும் திமுக கூட்டங்களில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தகவல் பரவியுள்ளது. அது உண்மையில்லை. நாங்கள் அந்த கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிக்குத் தேவையான நல்ல கருத்துகளை எடுத்துரைக்கவுள்ளோம்.

ஆனால், பொதுக்குழுவி்ல் ஆலோசனை செய்யப்படவிருக்கும் தீர்மானங்கள் குறித்து இன்னும் தென்மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கவில்லை.

தமிழக போலீசார் வேண்டுமென்றே திமுகவினர் மீது பொய் வழக்குகளை ஜோடிக்கின்றனர். அவ்வாறு செய்யும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் மீது தவறான தகவல்களை பதிவு செய்யும் அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம்.

அதிமுகவினர் மீதும் தான் நில அபகரிப்பு புகார்கள் கொடுக்கபப்ட்டுள்ளன. ஆனால் போலீசார் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தென் மண்டல திமுக நிர்வாகிகளை மட்டும் குறிவைத்து செயல்படுகின்றனர்.

அன்மையில் திமுக நிர்வாகிகள் சிலரது வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். ஆனால் அந்த சோதனையில் எதுவும் கிடைக்காததால் வீடுகளில் இருந்த பாஸ்புக் மற்றும் செக்புக்குகளை எடு்த்துச் சென்றுள்ளனர்.

திமுக நிர்வாகிகளின் வீட்டுகளுக்குள் போலீசார் அத்துமீறி நுழைந்துள்ளனர். இது சட்ட விரோத செயலாகும். ஒரு திமுக நிர்வாகியின் வீட்டுப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

போலீசாரின் இந்த அச்சுறுத்தல்களைக் கண்டு திமுகவினர் பயந்துவிட மாட்டார்கள். போலீசாரின் பாரபட்சமான நடவடிக்கைகளை எதிர்த்து திமுக தலைவர் போராட்டம் அறிவித்துள்ளார். அதில் பங்கேற்று நாங்கள் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம் என்றார்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக