தென் ஆப்ரிக்க விடுதலைக்காக போராடி வெற்றி பெற்ற, அந்நாட்டின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, நேற்று தன் 93வது பிறந்த நாளை கொண்டாடினார். தென் ஆப்ரிக்க விடுதலைக்காக 67 ஆண்டுகள் தன்னை அர்ப்பணித்தவர் நெல்சன் மண்டேலா. இவரது 93வது பிறந்த நாள், நேற்று அந்நாடு முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், குழந்தைகள் காலையில் வகுப்புகளுக்குச் செல்லும் முன், மண்டேலாவை வாழ்த்தி பாட்டுப் பாடினர். நாட்டிற்காக இவர் 67 ஆண்டுகள் அர்ப்பணித்ததை முன்னிட்டு, 67 நிமிடங்கள் நாட்டுக்காக ஒவ்வொருவரும் சேவை செய்ய வேண்டும் என்று, நெல்சன் மண்டேலா பவுண்டேஷனும் கேட்டுக் கொண்டது.
ஆனால், மண்டேலா தன் சொந்த கிராமமான கிழக்கு ஈஸ்டர்ன் கேப்பில் பிறந்த நாள் கொண்டாடினார். இவருக்கு ஐ.நா., பொதுச் செயலர் பான் கீ மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக