ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இஸ்ரேலின் தெல் அவி நகரில் 50,000 ற்கு மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்




இஸ்ரேலில் வீட்டு மனைகள், வாழ்வாதார செலவு அதிகரித்து செல்வதை கண்டித்து 'தெல் அவி' நகரில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. சுமார் 50,000 ற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான 20,30 வயது இளைஞர்களே கலந்து கொண்டுள்ளனர்.


யூதர்கள் அதிகமாக வாழும் பிற மாகாணங்களிலும் இதே கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நடுத்தர, ஏழை வர்க்க்த்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டை அந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வாழ்வாதார செலவு மோசமாக அதிகரித்து செல்வதாகவும், வீடு, காணி நிலம் என்பவற்றின் விலை வரலாறு காணாத உயர்வு கண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பணக்காரர்கள் தங்களுக்கு ஏற்றது போல் சட்ட விதிகளை மாற்றிஅமைத்துக்கொண்டு மேலும் பணக்காரர்களாகின்றனர். நாங்கள் ஏழைகளாகவே இருக்கிறோம். இந்நிலைமை மாறவேண்டும். இது ஒரு ஜனநாயக நாடு என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, மலிவு விலைகளில் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக