சென்னை:அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய மோட்டார் வாகன விதி 50, 51ன் படி அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் (நம்பர் பிளேட்) பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். விதிகளின்படி நம்பர் பிளேட்களை பொருத்துவதில்லை. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு பிளேட்டில் சிறிதாகவும், பெரிதாகவும் நம்பர்களையும்& எழுத்துக்களையும் ஸ்டைலாக எழுதிக் கொள்கின்றனர். இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதனை தடுக்க வாகன உரிமையாளர்கள் விதிகளுக்கு உட்பட்டு 30 நாட்களுக்குள் (ஆகஸ்ட் மாத இறுதிக்குள்) முறையான நம்பர் பிளேட்களை பொருத்த வேண்டும். விதிகளை மீறி வாகனத்தை இயக்கினால், மோட்டார் வாகனங்களின் பதிவு சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். நம்பர் பிளேட்டில் இருக்க வேண்டிய எழுத்துகள், எண்கள் அளவு:
பைக் முன்புறம் நம்பர் பிளேட்: 45 மி.மீ. உயரம், 285 மி.மீ அகலம். எழுத்துகள் மற்றும் எண்கள் 30 மி.மீ. உயரமும், 5 மி.மீ. தடிமனும் இருக்க வேண்டும். 5 மி.மீ. இடைவெளி விட வேண்டும். பைக் பின்புறம் நம்பர் பிளேட்: 100 மி.மீ உயரம், 200 மி.மீ அகலம். எழுத்துகள் 35 மி.மீ உயரமும், 7 மி.மீ தடிமனும், எண்கள் 40 மி.மீ உயரமும், 7 மி.மீ தடிமனும் இருத்தல் வேண்டும். 5 மி.மீ இடைவெளி விட வேண்டும்.
கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் நம்பர் பிளேட்: 120 மி.மீ. உயரம், 500 மி.மீ. அகலம். எழுத்துகள் மற்றும் எண்கள் 65 மி.மீ. உயரமும், 10 மி.மீ. தடிமனும் இருக்க வேண்டும். 10 மி.மீ. இடைவெளி விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக