ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை தமிழ் விதவைகளுக்கு இந்தியா நேரடி உதவி

இலங்கையின் கிழக்குப் பகுதியில் புலிகளுடனான மோதல்கள் காரணமாக கணவனை இழந்த பெண்களுக்கு இந்தியா சார்பில் ரூ. 20. 3 கோடி மதிப்பிலான உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக இந்திய தூதர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சண்டையில் கிழக்குப் பகுதியில் மட்டும் குறைந்தபட்சம் சுமார் 49 ஆயிரம் பெண்கள் கணவனை இழந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வட பகுதியில் மோதல்கள் காரணமாக கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்- பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் விதவைகளுக்கு உதவ இந்தியா முன் வந்துள்ளதாக அசோக் கே. காந்தா தெரிவித்தார்.
“போரால் கணவனை இழந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வழிவகை செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்த நிதி உதவித் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன் வாழ்வாதாரத்துக்கான வழிவகைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக