உலகப்புகழ் பெற்ற கங்ணம் சையின் இரண்டாம் பொப் ஆல்பம் வெளியீடு(வீடியோ இணைப்பு)
தென்கொரிய பொப் பாடகரும், நடனக் கலைஞருமான பார்க் ஜீ சங்(Psy) கடந்த 2012ம் ஆண்டில் வெளியிட்ட கங்ணம் பொப் பாடல் இவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தது.
குதிரையின் அசைவுகளை ஒத்த இந்தப் பாடலுக்கான நடனம் மிகவும் புகழ் பெற்று 1.5 பில்லியனுக்கும் மேல் மக்கள் இந்தப் பாடலைப் பார்த்து ரசித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவர், அசரெபியா என்ற தலைப்பில் புதிய பாடலை வெளியிடத் திட்டமிட்டிருந்தார். ஆனால், இதன் பின்னர் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அவரது புதிய பொப் பாடல் ஆல்பம் ஜென்டில்மேன் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் இசை புதிய தொழில் நுட்பத்துடனும், பாடல் வரிகள் கொரிய வழக்குச் சொற்கள் கலந்தும் இருக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் வருகின்ற சனிக்கிழமை இதன் முதல் நடனக்காட்சி சியோல் நகரில் உள்ள உலகக் கிண்ண நடன அரங்கில் நடைபெறவுள்ளது.
கொரிய நாட்டு நடன பாணியை இதில் காணலாம் என்று கூறிய இவர், நிகழ்ச்சிக்கு வருகின்ற பொதுமக்களை வெள்ளை நிற உடையில் வரும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
பத்து வருட கடின உழைப்பிற்கு பின்னர் கங்ணம் பாடல் சைக்கு உலகப்புகழை அளித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக