ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கஃபாவுக்குள்ளே என்ன இருக்கிறது?



கேள்வி: 'நீங்கள் ஹஜ் செய்யும் போது கஃபாவில் உள்ள எங்களின் கடவுளைச் சுற்றி நான்கு 
புறமும் தடுப்புச் சுவர் கட்டி வழிபடுகிறீர்கள். கஃபா உங்களுக்கு உள்ளது அல்ல. இது
இந்துக்களின் தெய்வம்' என ??????????????

பதில்: கஃபா என்னும் செவ்வகமான கட்டிடத்துக்கு உள்ளே ஏதோ சிலைகள் இருப்பதாக
நினைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இதோ  பதில்

கஃபா என்னும் கட்டிடம் தொழுகை நடத்துவதற்காக முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால்
கட்டப்பட்டது. பின்னர் அது சிதிலமடைந்த பின் இப்ராஹீம் (அலை) அவர்களால் மறு
நிர்மாணம் செய்யப்பட்டது. அவர்களெல்லாம் அக்கட்டிடத்துக்குள்ளேயே தொழுதார்கள். நமது
நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் எப்படி தூய இடமாக உள்ளதோ அது போன்ற தூய இடம் மட்டும்
தான் உள்ளே இருக்கிறது. எந்தப் பள்ளிவாசலும் எப்படி எந்தச் சிலையும், வழிபாட்டுச்
சின்னமும் இல்லாமல் உள்ளதோ அது போன்ற வெற்றிடம் தான் கஃபாவுக்கு உள்ளேயும்
இருக்கிறது.

மக்கள் தொகை பல கோடி மடங்கு பெருகி விட்ட நிலையில் அதனுள்ளே போய்த் தொழமுடியாது
என்பதால் தான் உள்ளே யாரும் இப்போது அனுமதிக்கப்படுவதில்லை.

கஃபாவுக்குள்ளே நான்கு சுவர்களும் தூண்களும் தவிர வேறு எதுவுமே இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக