கடந்த 37 வருடங்களாக உடம்பில் தண்ணீரே படாமல் வாழ்ந்து வருகின்றார் குரு கைலாஷ் சிங் என்ற இந்த 65 வயது மனிதர்.
இவரைக் குளிப்பாட்டவும், உடம்பைக் கழுவச் செய்யவும் இவரின் குடும்பத்தவர்கள் இதுவரை செய்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
உங்கள் பக்கத்தில் கூட வர மாட்டேன் என்று மனைவியும் மிரட்டிப் பார்த்தார். ஆனால் குருவோ பரவாயில்லை குளிப்பதைப் பற்றி மட்டும் பேச வேண்டாம் என்று கூறி வருகின்றார்.
இப்போது உலகிலேயே மிகவும் துர்நாற்றம் பிடித்த மனிதர் இவர்தான் என்று கூறுமளவுக்கு கப்படிக்கத் தொடங்கிவிட்டது. குடும்பத்தவர்ளான மனைவி மகள்மார் மற்றும் பேரப்பிள்ளைகள் மிகவும் கஷ்டத்தோடு சகித்துக் கொண்டுள்ளனர்.
1974 முதல் இவர் குளித்தும் இல்லை. தலைமுட, தாடி என்பனவற்றை சீர் செய்ததும் இல்லை. இப்போது அவை ஆறு அடிக்கு மேலாக வளர்ந்துள்ளன.
இவ்வாறு குளிக்காமல் இருந்தால் இவருக்கு மிகவும் பெறுமதி மிக்க ஒரு மகன் பிறப்பான் என்று ஒரு சாமியார் குறியுள்ளார். அதை நம்பித்தான் அவரும் குளிப்பதை நிறுத்திக் கொண்டார்.
ஆனால் அதன் விளைவு மனைவியோ பக்கத்தில் வரவும் மறுத்துவிட்டார். ஏற்கனவே இவருக்கு ஏழு மகள்மார் உள்ளனர். மகன் ஒன்று இல்லையே என சாமியாரை நாடிச் சென்ற போதுதான் சாமியார் இந்த யோசனையைத் தெரிவித்துள்ளார்.
சாமியாரின் வாக்கு 37 வருடங்களாகியும் பலிக்கவில்லை. ஆனால் கைலாஷ் சிங்கோ இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை.
இனிமேல் இது எப்படி சாத்தியமாகும் என்று கிராமத்தவர்கள் கேலி செய்து வருகின்றனர். இவர் மாடு மேய்த்தல்,விவசாயம் ஆகிய தொழில்களில் ஈடுபடுகின்றார்.
தினசரி மாலையில் நெருப்பு மூட்டி அதில் மர்ஜுவானாவுடன் குளிர்காய்வது இவரின் வழக்கம். போதை ஏறியதும் அந்த நெருப்பைச் சுற்றி நடனமும் ஆடுவாராம்.
இவரை பலவந்தமாகக் குளிப்பாட்ட குடும்பத்தவர்கள் பல தடவைகள் முயற்சித்தபோதும் அது எதுவுமே பலனளிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக