நாகர்கோவில் அருகே உள்ள சுசீந்திரம் பகுதியை சேர்ந்த மாணவன் விவேக் (17). நாகர் கோவிலில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறான். கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளியில் இருந்து திரும்பி வந்த விவேக், தனது நண்பனை பார்த்து விட்டு வருவதாக சென்றான். ஆனால் இரவு வெகு நேரமாகியும் விவேக் திரும்பி வரவில்லை.
இது குறித்து சுசீந்திரம் போலீ சில், அவரது தந்தை புகார் அளிக்க போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விவேக்கின் நண்பர்கள் சிலரிடம் விசாரித்த போது, நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒரு வர் விவேக் மீது அதிக அன்பு காட்டி வந்தது தெரிய வந்தது.
எனவே இது குறித்து போலீசார் விசாரித்து வருகையில், கோட்டார் பகுதியை சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவர் மாயமாகி விட்டதாக கோட்டார் போலீசில் ஒரு தரப்பினர் புகார் அளித் தனர். இதனால் இந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நடந்த தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. கோட் டார் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். இவர் பயிற்சிக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்றார்.
அந்த பள்ளியில் தான் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த விவேக் படித்து வந்தான். அப்போது விவேக் 11ம் வகுப்பு படித்தான். ஆசிரியை பாடம் நடத்தும் போது, விவேக் ஜாலியாக பேசுவது உண்டு. அடிக்கடி வகுப் பறையில் ஜோக் அடித்து அனைவரையும் மகிழ வைப்பார்.
விவேக்கின் செய்கை கள் ஆசிரியைக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது. விவேக் மீது அதிக அன்பு பொழிய தொடங்கினார். முதலில் ஆசிரியை & மாணவன் என்ற ரீதியில் இருந்த இவர்களது பழக்கம், பின்னர் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. ஓட்டல், தியேட்டர், பீச் என தனது நட வடிக்கைகளை அவ்வப்போது மாற்றி காதலர்களாக வலம் வந்தனர்.
இந்த நிலையில் கோடை விடுமுறையிலும் விவேக், ஆசிரியை தான் கதி என கிடக்க அவரது பெற்றோ ருக்கு விவகாரம் தெரிய வந்தது.
தன்னை விட 4 வயது மூத்த பெண்மணியுடன், தனக்கு கற்று கொடுக்க வந்த ஆசிரியையுடன் மகன் நெருங்கி பழகுவதை எண்ணி அவர்கள் வேதனை அடைந்தனர். இந்த சம்பவம் தெரிய வந்தது முதல் இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை உருவானது.
இருவருக்குமே அவ்வப்போது அறிவுரைகள் கூறி வந்தனர். இருவரையும் பிரித்து விட வேண்டும் என பெரியவர்கள் முயற்சிக்க, விவேக்கை , என்னால் பிரிய முடியாது. எனது வாழ்க்கை அவனுடன் தான் அமையும். எங்களை பிரிக்க நினைத்தால் விபரீதம் வேறு விதமாக இருக்கும் என ஆசிரியை கூறினார். விவேக்கும் இதே நிலையில் தான் இருந்தான்.
இதற்கிடையே ஆசிரியை வீட்டில் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திரு மணம் செய்து வைக்க முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று இருவருமே மாயமாகி விட்டனர். எங்களை சேர்த்து வைப்பதாக இருந்தால் நாங்கள் போலீஸ் நிலையத்துக்கு வருகிறோம். பிரித்து வைப்பதாக இருந்தால் நாங்கள் வர மாட்டோம. எங்கள் வாழ்க்கையை நாங்கள் அமைத்து கொள்வோம் என்று கூறி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக