ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அ.தி.மு.க., ஆட்சி அமைத்ததால் உற்சாகம் : நியமன பதவிகளுக்கு தே.மு.தி.க., நிர்வாகிகள் குறி


 நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 29 இடங்களில் வெற்றி பெற்றதுடன், அ.தி.மு.க., ஆட்சியமைத்ததில், தே.மு. தி.க., தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கோவில்களில் அறங்காவலர் குழு, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பொறுப்பு, வாரியத்தலைவர் பணியிடங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து, தே.மு.தி.க.,வினர் காய் நகர்த்தி வருகின்றனர்.


தமிழகத்தில், 2005ம் ஆண்டு தே.மு. தி.க., துவக்கப்பட்டது. கட்சி துவங்கிய சில மாதங்களில், 2006 சட்டசபை பொதுத்தேர்தலை சந்தித்தது. இதில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, விருத்தாசலம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அதன் பின் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது. ஒரு சில கவுன்சிலர் உள்ளிட்ட இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.

கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியே கிடைத்தது. ஆறு ஆண்டுகளாக தே.மு.தி.க., கட்சி வளர்ந்து வந்தாலும், அக்கட்சி நிர்வாகிகளுக்கு எவ்வித பொறுப்புகளும், அதிகாரங்களும் கிடைக்காத நிலை காணப்பட்டு வந்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் சட்டசபையில் இரண்டாவது பிரதான கட்சி என்ற இடத்தையும் பிடித்தது. தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு அ.தி.மு.க.,வுக்கு, 146 எம்.எல்.ஏ.,க்கள் சீட் இருப்பதால், ஆட்சியில் பங்கு பெறுவதையோ, அமைச்சர் பதவிகளை கேட்டுப் பெறுவதோ தே.மு.தி.க.,வுக்கு இயலாத காரியமாகி விட்டது.
இருப்பினும் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க., ஆட்சியேற்றுள்ளதால், அரசால் நியமிக்கப்படும் கவுரவ பதவிகளில் தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களின் அறங்காவலர் பணியிடங்கள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிர்வாக பொறுப்பு ஆகியவற்றையும் கைப்பற்ற தே.மு.தி.க.,வினர் ஆர்வத்துடன் உள்ளனர். கட்சியை மேலும் வளர்க்கவும் இது போன்ற பதவிகளும், அதிகாரங்களும் அவசியம் எனவும் கட்சி தலைமையிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால், அதிலும், அ.தி.மு.க., - தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பும். இதனால், வாரிய தலைவர் பதவி உள்ளிட்ட நியமன பதவிகளை கேட்டுப் பெற வேண்டும் என, தே.மு.தி.க., நிர்வாகிகள் வலியுறுத்தத் துவங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக