ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கையிலும் ஆட்சிக்கவிழ்ப்புக்கு தயாராகும் அமெரிக்கா"


இலங்கையில் ஆட்சிக்கவிழ்ப்பு க்கு அமெரிக்கா முயற்சி செய்கிறதா?
  • அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் அரசாங்கத்தை மாற்ற அல்லது கவிழ்க்க முனைவதாக ஜனாதிபதியும், அமைச்சர்களும் சந்தேகிக்கின்றனர்.இதன் காரணமாகவே அரசாங்கம் இன்னொரு திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொள்வது இங்கு கவனிக்கத் தக்கது.அண்மையில் ஐ.நாவுக்கு எதிராக நடத்தப்பட்ட மேதினத்தன்று எடுத்துச் செல்லப்பட்ட ஒரு பதாகை விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அந்தப் பதாகையில், அமெரிக்காவினால் விரும்பப்படாத சில நாடுகளின் தலைவர்களின் படங்கள் இருந்தன. முதலில் வெனிசுலா அதிபர் சாவோஸ், அடுத்தது மகிந்த ராஜபக்ஸ, அதற்கடுத்து பிடல் கஸ்ட்ரோ, கடாபி, புடின், கடைசியில் சீனப் பிரதமர் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இது அமெரிக்காவினால் விரும்பப்படாத, அதன் வெறுப்பை சம்பாதித்த நாடுகளின் தலைவர்களுடன் மகிந்த ராஜபக்ஸ சேர்ந்து கொண்டுள்ளதை வெளிப்படுத்துகிறதா அல்லது அமெரிக்காவுக்கு எதிராக நாமும் அணி கோர்க்கத் தயாராகிறோம் என்பதை வெளிப்படுத்துகிறதா? இந்தக் கேள்வி மேற்குலக இராஜதந்திர வட்டாரங்களில் எழுந்திருந்தது. சாவோசை பதவியில் இருந்து அகற்றும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டது. அது போலவே காஸ்ட்ரோ அமெரிக்காவுக்குப் பல தசாப்தங்களாகவே சவாலாக இருப்பவர். கடாபிக்கு எதிராக இப்போது போர் செய்கிறது அமெரிக்கா. புடினும், சீனப் பிரதமரும் அமெரிக்காவினால் எதிரிகளாகப் பிரகடனம் செய்யப்படாது போனாலும்இ அதனால் விரும்பப்படாதவர்கள் தான். இந்த அணியில் மகிந்த ராஜபக்ஸ தானாகவே இடம்பிடிக்க நினைக்கிறாரா அல்லது அமெரிக்காவே அவரை இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளதா என்பது கேள்வி. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முனையவில்லை என்ற பிளேக்கின் உறுதிமொழி எந்தளவுக்கு வலிமையானது என்பதை இப்போது முடிவு செய்துவிட முடியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக