நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து நடிகர் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
இதையடுத்து நடிகர் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’நான் தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கூறிவந்தேன்.
ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக என் தந்தை அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார்.
வாக்குப்பதிவு அன்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்ததும், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன் என பேட்டி அளித்தேன்.
என் ஆசையும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதுதான். நான் ஆசைப்பட்டது நடந்துவிட்டது’’ என்று தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக