எப்படி இருந்த நான் இப்படிஆகி விட்டேன்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இரவில் ஒரு போர்வையின் மீது மட்டுமே படுத்து உறங்குகிறார். சிறைக்குள் இவரின் ஒவ்வொரு பொழுதும் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக உடற்பயிற்சி கூடம், நூலகத்துக்கு இவரை அனுப்புவதில்லை.
காலை 6.30 மணிக்கு ஒரு கப் டீயும், 2 ரொட்டி துண்டுகளும் கிடைக்கும்.
காலை 9 மணிக்கெல்லாம் குளித்து தயாராகிவிட வேண்டும். இரண்டே இரண்டு சப்பாத்திகள் டிபனுக்கு கிடைக்கும். கொஞ்சம் சாதம், பருப்பு, காய்கறி பொரியல் கிடைக்கும். அதை மதிய உணவாக காலை 9 மணிக்கே வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
நண்பகலில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார். பின்னர் மாலை 3 மணி வரை சிறை அறைகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பார்.
இந்த நேரத்தில் அவர் படிக்கலாம், தொலைக்காட்சி பார்க்கலாம். மாலை 3 மணிக்கு 2 பிஸ்கட்டும் ஒரு கப் டீயும் வழங்கப்படும்.
மாலை 6 மணிக்கெல்லாம் இரவு உணவை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மீண்டும் சிறைக்குள் அடைக்கப்படுவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக