ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒசாமா இடத்தை ஜவாகிரி நிரப்ப வாய்ப்பு-தீவிரவாதம் ஓயுமா?

Al zawahiri
வாஷிங்டன்: பின்லேடன் மரணத்தையடுத்து அவரது இடத்தை அல்-கொய்தாவின் நம்பர் டூ என கருதப்படும் அய்மான் அல் ஜவாகிரி நிரப்புவார் என்று அமெரிக்கா கருதுகிறது.
பின்லேடன் போய் விட்டாலும், அவர் ஏற்படுத்தி வைத்துள்ள தீவிரவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் விரவியுள்ள பல்வேறு தீவிரவாத அமைப்புகள், லேடனை தியாகியாக காட்டிக் கொண்டு, மேலும் உத்வேகத்துடன் செயல்படும் சாத்தியக்கூறுகள்தான் அதிகம் உள்ளன.

நவீன உலகில், அமெரிக்கா மீது எந்த நாடுமே செய்யத் துணியாத அநியாதத்தைச் செய்தவர் பின்லேடன்தான். நியூயார்க் தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து இன்று வரை அமெரிக்கர்கள் மீளவில்லை.

இந்த நிலையில் பத்து ஆண்டு போராட்டத்திற்குப் பின்னர் லேடனை வீழ்த்தி ஓய்ந்துள்ளது அமெரிக்கா. ஆனால் இனிமேல்தான் அமெரிக்காவுக்கு பெரும் ஆபத்துகள் காத்துள்ளன என்கிறார்கள் பயங்கரவாதத்தின் ஆழம் குறித்து அறிந்தவர்கள்.

தீவிரவாதிகளின் அசைக்க முடியாத ஹீரோவாக அவன் உருப்பெறலாம். அதி நவீன உத்திகள், ஆயுதங்களுடன் அலையும் தீவிரவாதக் குழுக்களுக்கு பின்லேடன் ஒரு மானசீக குருவாகவே விளங்கி வந்தார். இப்போது பின்லேடன் விட்டு விட்டுப் போயுள்ள 'லிகசியை' அவர்கள் கட்டிக் காக்க முயல்வார்கள். முன்பை விட மிகவும் பலமான எதிரியாக அமெரிக்காவை இனிமேல் தீவிரவாதிகள் பார்ப்பார்கள்.

தாக்குதலில் அல் கொய்தாவின் நம்பர் டூ தலைவரான ஈமான் அல் ஜவாஹிரி கொல்லப்படவில்லை. எனவே இனி அவர் அல் கொய்தாவின் தலைவராக செயல்படுவார். அவரது தலைமையில் அல் கொய்தா புதுப் புதுத் தாக்குதல்களில் ஈடுபடக் கூடும்.

பல முக்கியத் தலைவர்களை அல் கொய்தா இழந்திருந்தாலும் கூட தாக்குதல்களை வகுத்து அதை செயல்படுத்தும் திறமையுடன் கூடியவர்கள் பலர் அந்த அமைப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், பின்லேடன் கொலைக்குப் பழி வாங்க உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகள் இனி ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

ஜார்ஜ் புஷ் காலத்தில் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான போர் இனிமேல்தான் முழு வீச்சில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையைச் சொல்வதானால் இனி மேல்தான் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. காரணம், லேடன் கொல்லப்பட்டுள்ளது நமது அண்டை நாடான பாகிஸ்தானில்.

லேடனின் மறைவால் தீவிரவாத நூலில், ஒரு அத்தியாயம்தான் தற்போது முடிந்துள்ளது. 'முற்றும்' போடப்படவில்லை.

ஈமான் அல் ஜவாஹிரியின் எங்கே?:

இந் நிலையில் பின்லேடனுடன் எப்போதும் உடன் இருந்தவருமன அல் கொய்தாவின் துணைத் தலைவரான ஈமான் அல் ஜவாஹிரி எங்கே என்பது தெரியவில்லை.

அவரும் பாகிஸ்தானில் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக