ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

விஷ மாம்பழத்தை கண்டறிய ?


செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை பார்த்தவுடன் கண்டறிய முடியாது என்பதால், பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மதுரையில் சமீப காலமாக கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இப்பழத்தை உண்போருக்கு வயிற்றோட்டம், பேதி, கேன்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன.
இயற்கையானவற்றை விட "மினுமினுப்பு' கூடி, நன்கு பழுத்த பழம்போல, மக்களை கவரும் இந்த மாம்பழங்கள் விஷமானவை. மாம்பழங்களின் தோலில் சுருக்கம் இருந்தால் அது இயற்கையான பழம் என வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர். அது முழுவதும் சரியானதல்ல. இயற்கையான மாம்பழம் தோல் சுருக்கம் இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம்பழங்களின் தோலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறானதே. ஏனெனில் நோய் தாக்குதலாலோ, மாங்காய்களின் பால் படுவதாலோ கூட கறுப்பு புள்ளிகள் தோன்ற வாய்ப்புள்ளன. எனவே செயற்கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது கஷ்டமான காரியம்.

மாம்பழங்களின் பழுக்கும் தன்மை குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சி.முத்துத்துரை கூறியதாவது: கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கும் மாம்பழங்களை கண்டு பிடிப்பது கடினமானது. அனுபவத்தின் மூலமே அறிய முடியும். பொதுவாக வெளித்தோற்றமே பழம்போல இருக்கும். உள்ளே பழுத்த தன்மையோ, சுவையோ, மணமோ இராது. எந்த ஒரு பழமும் விளைச்சல் (ஏச்ணூதிஞுண்tச்ஞடூஞு Mச்tதணூடிtதூ) என்ற நிலைக்கு வந்த பின்பே, அதில் சுக்ரோஸ் என்ற இனிப்பு தன்மை வரும். அதன் பின் புகைமூட்டம் போன்றவற்றால் பழுக்க வைப்பதால் பாதிப்பு வராது. ஆனால் காயாக இருக்கும்போதே, அதை ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைப்பதால் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை விவசாய கல்லூரி தோட்டக்கலைத் துறை தலைமை பேராசிரியர் மாரியப்பன் கூறியதாவது: செயற்கையாக பழுத்த மாம்பழங்களை வெளிப்புற தோற்றம் மூலம் கண்டு பிடிக்க முடியாது. அதிகளவில் பழங்களை வாங்குவோர், பழங்களில் ஒன்றை வெட்டிப் பார்த்து சுவைத்து பார்த்தே வாங்க வேண்டும். ஏனெனில் செயற்கையாக பழுத்த பழங்களில் இயற்கையான பழம்போன்ற சுவையோ, மணமோ இருப்பதில்லை, என்றார்.

பேராசை பெரும் நஷ்டம் :மதுரை மாவட்டத்தில் 6721 எக்டேர் நிலத்தில் மா விவசாயம் நடைபெறுகிறது. இதில் 26 ஆயிரத்து 884 மெட்ரிக் டன் மாம்பழம் கிடைக்கிறது. ஆண்டுதோறும் இந்த மாம்பழங்கள் மதுரை மார்க்கெட்டிற்கு வருகிறது. பெரும்பாலும் விவசாயிகளிடம் குத்தகைக்கு பெறும் விவசாயிகள், அவசர கதியில் மாங்காய்களை பறித்து, செயற்கையாக பழுக்க வைத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.கடந்தாண்டு கார்பைடு மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்கின்றனர் என்பது மக்களிடையே பரவியதால் மாம்பழ விற்பனை படுத்து விட்டது. இந்தாண்டும் கார்பைடு பழ பீதியால் முறையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை வாங்க கூட மக்கள் அஞ்சுகின்றனர்.கார்பைடு மூலம் பழுக்க வைக்கும் முறையை முழுமையாக கை விட்டால் தான் மக்கள் மாம்பழத்தின் பக்கம் திரும்புவர்.

மதுரையில் கடந்த சில நாட்களாக "விஷ' மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதையடுத்து மதுரை பழக்கமிஷன் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் அறிவுச் செல்வம், முருகானந்தம் தலைமையில் நடந்த அவசர பொதுக்குழுவில் சில தீர்மானங்களை நிறைவேற்றினர். அனைத்து வியாபாரிகளும் கால்சியம் கார்பைடு கல்லை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இனிவரும் நாட்களில் அவ்வாறு தவறு செய்பவரை அடையாளம் கண்டு சட்ட பூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். இனிவரும் நாட்களில் கல் வைக்காமல் பழுக்க வைத்த பழங்கள் விற்பனைக்கு தரப்படும். எனவே பொதுமக்கள் அச்சமின்றி பழங்களை வாங்கி பயன்படுத்தலாம். பழவியாபாரிகள் மீதான வழக்குகளை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக