ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நியூயார்க் மேயரிடம் ரூ 7.5 கோடி இழப்பீடு கேட்டு இந்திய துணைத் தூதரின் மகள் வழக்கு

: தவறான குற்றச்சாட்டின் பேரில் தன்னைக் கைது செய்து அவமானப்படுத்தியதற்காக ரூ. 7.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று கோரி நியூயார்க் நகர நிர்வாகம் மீதும், நியூயார்க் நகர மேயர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார் இந்திய துணைத் தூதர் தேபஷிஸ் பிஸ்வாஸின் 18 வயது மகள் கிருத்திகா பிஸ்வாஸ். அமெரிக்காவில் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்ஹாட்டனில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் துணைத் தூதரக அதிகாரியாக இருக்கிறார் தேபஷிஸ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா அங்குள்ள பள்ளியொன்றில் படித்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் இவர் திடீரென கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து இவரை பள்ளி நிர்வாகம் பள்ளியிலிருந்து நீக்கியது.

தனது ஆசிரியர்களுக்கு ஆபாச இமெயில்களை அனுப்பினார் கிருத்திகா என்பதுதான் அவர் மீதான புகார். ஆனால் அந்த மெயில்களை அனுப்பிய உண்மையான குற்றவாளி பின்னர் பிடிபட்டார். இதையடுத்து காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார் கிருத்திகா. அவரது சஸ்பென்ஷனையும் பள்ளி நிர்வாகம் ரத்து செய்து மீண்டும் சேர்த்துக் கொண்டது.

இந்த நிலையில் நியூயார்க் நகரம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் கிருத்திகா. இதுதொடர்பாக மேயர் மைக்கேல் ப்ளூம்பர்க் தனக்கு ஏற்பட்ட மன வேதனை, கெட்ட பெயருக்கு இழப்பீடாக ரூ. 7.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இதுகுறித்து கிருத்திகா கூறுகையில், நான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எனது தோழி என்னிடம், கைது செய்யப்பட்டது உனக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டாள். இதனால் எனது மானமே போய் விட்டது. நான் தவறு செய்யவில்லை. இந்த நிலையில் கைது செய்யப்பட்டது எனக்கு பெரும் அவமானமாகியுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக