ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கனிமொழி உள்ளே..தயாளு வெளியே..நியாயம் எங்கே?


ஸ்பெக்ட்ரம் வழக்கு குற்றப் பத்திரிக்கையில் கனிமொழி பேரைச் சேர்த்திருக்காங்க..மே 6ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராகணும்னு கோர்ட் சொல்லி இருக்கு. 
சிபிஐங்கிறது பெரிய பெரிய ஆபிசருங்க வேலை செய்ற அமைப்பு..பெரிய்ய போலீஸ்னு கூடச் சொல்லலாம்..அவங்க எது செஞ்சாலும் அதுக்குப் பின்ன ஒரு நியாயம் இருக்கும் தான்..இப்ப பிரச்சினை, இதுல உள்ள நியாயம் நம்ம மாதிரி சாமானியங்களுக்குப் புரியலேங்கிறது தான்.

கனிமொழி மேல சொல்லி இருக்குற குற்றச் சாட்டைப் படிச்சா பகீர்னு இருக்கு. ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த ஸ்வான் நிறுவனம், தன் துணை நிறுவனம் மூலமா 214கோடி கலைஞர் டிவிக்கு கடன் கொடுத்துச்சாம். ஏன் கொடுத்துச்சு..விளக்கம் சொல்லு-ன்னு பெரிய போலீஸ் கேட்குது.

அடப்பாவிகளா..ராசா சொத்தே கண்டுபிடிச்ச வரைக்கும் 1500 கோடியைத் தாண்டுதாம். ஆனா, கனிமொழி இதுல பண்ண தப்பு வெறும் 214கோடியை கடனா வாங்குனதும், திருப்பிக் கொடுத்ததும் தானாம். மத்தபடி அவங்க எந்தத் தப்பும் பண்ணலியாம்..அத்தீ, கண்டுபிடுச்சுட்டாருய்யா போலீஸ்காரு!

’ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி அரசுக்கு இழப்பு’-ங்கிறதுல கனிமொழி பங்கு 214 கோடியை கைமாத்து வாங்குனது மட்டும் தானாம்..அவ்வளவு தான்னு பெரிய போலீஸ் சொல்லுது..நம்ம ஆட்களும் ஆஹா, சபாஷ்..நீதி வென்றது-ன்னு பாராட்டுறாங்க. மம்மி உடனே ‘கனிமொழியை கைது செய்’னு சொல்லுது. அம்மா, உடம்பும் நகையுமாப் பிடிச்ச உங்களையே ஒன்னும் செய்ய முடியல..இந்த கைமாத்து மேட்டர்லாம் சும்மா ஜூஜூபி-ன்னு உங்களுக்கு நிஜமாவே தெரியலியா...
கலைஞர் டிவில கனிமொழிக்கும் சரத்குமாருக்கும்(சித்தப்பா இல்லீங்க..இவர் வேற!) தலா 20% பங்கு இருக்காம்..அதனால அவங்க ரெண்டு பேர் மேலயும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கு. சரி, 60% பங்கு வச்சிருக்குற தயாளு அம்மாள் பேரை ஏன் சேர்க்கலை? 

நாடகம் போடறதுன்னு முடிவு பண்ணியாச்சுன்னா, அவங்களுக்கும் ஒரு வேசத்தைக் கட்டிவிட வேண்டியது தானே..வசனத்துக்கும் அலையவேண்டியதில்லை..’குற்றம் சாட்டப்பட்டதாலேயே குற்றவாளி அல்ல’-ன்னு சொல்லலாம்..’தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’-னு சொல்லலாம். 

நேத்தே ஒரு ரிப்போர்ட்டரம்மா ‘குற்றப் பத்திரிக்கைல உங்க குடும்பத்து ஆளுங்க பேரு வருமா?’ன்னு கேட்டதுக்கு தலைவரு ’ஒரு பொண்ணாப் பொறந்துட்டு, இப்படி இதயமில்லாம கேள்வி கேட்கீங்களே’ன்னு அழுதிருக்காரு. அதுசரி, பொண்ணாப் பொறந்துட்டு ஊழல் வேணாச் செய்யலாம், இப்படிக் கேள்வி கேட்கலாமா..பெரிய தப்புல்ல அது!
எனக்கென்னமோ, மே13 வரைக்கும் சோனியா கொஞ்சம் விட்டுப் பிடிக்கும்னு தான் தோணுது. ரிசல்ட் ஆப்பு-ன்னு ஆகிடுச்சுன்னா, மனைவி-துணைவி-மகள்னு எல்லோரையும் வளைக்கவே சான்ஸ் இருக்கு. இல்லேன்னா, இப்படியே வழவழா கொழகொழா-ன்னு ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி கேஸை ஒன்னுமில்லாம ஆக்கிடுவாங்க!

அதனால மே 13 வரைக்கும் பொறுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக