ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தனி ஈழம்தான் திமுகவின் லட்சியம்!! – கருணாநிதி



சென்னை: இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு தனி தமிழ் ஈழம்தான் என்பது திமுகவின் நிலைப்பாடு. அதில் மாற்றமில்லை, என்று திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.
அரசின் போர்க் குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக இன்று தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியது. இக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு கருணாநிதி தலைமையில் தொடங்கியது.
கூட்டத்தில் இலங்கைக் தமிழர் படுகொலை குறித்து ஐநா குழு அளித்துள்ள அறிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்”, என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,
“இலங்கை போர் குற்றங்களுக்காக ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கை கடற்படையினர் ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. இறுதி கட்டப்போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை திமுக வலியுறுத்துகிறது. தமிழர்கள், சிங்களர்கள் இடையே சமத்துவ நிலை ஏற்பட வழி வகுக்கப்பட வேண்டும்.
போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசை திமுக உயர்நிலை செயல்திட்ட குழு வலியுறுத்துகிறது.
இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,” என கருணாநிதி தெரிவித்தார்.
தனி ஈழமே திமுகவின் குறிக்கோள்!
மற்ற1கருணாநிதி, தனி ஈழமே திமுகவின் குறிக்கோள். இலங்கை போர் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் போரில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை. சர்வதேச ஆணையம் விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்”, என்றார்.
2 ஜி: காங்கிரஸுக்கு திமுக தரும் பதில் நெருக்கடி
2 ஜி விவகாரத்தில் சிபிஐ மூலம் மத்திய அரசு திமுகவுக்கு அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வருவதைத் தொடர்ந்து பதிலடியாக தற்போது இலங்கை விவகாரத்தை திமுக கையிலெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த விஷயத்தில் இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தீர்மானம் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து, இதுதொடர்பாக பல்வேறு போராட்ட அறிவிப்புகள் திமுக தரப்பிலிருந்து வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது!
You 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக